தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

காஷ்மீரில் ஜெர்மன் சுற்றுலாப் பயணி கடத்தல்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகடத்தப்பட்டார். கடத்திச் சென்ற தீவிரவாதிகளைத் தேடிக் கண்டுபிடித்து சுற்றுலாப்பயணியை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் தலைவர் குர்பசன் ஜகத் கூறியதாவது:

லடாக் பகுதியில் ருங்டும் என்ற இடத்தில் ஜெர்மனி சுற்றுலாப் பயணி பயணம் செய்தஜீப்பை சில தீவிரவாதிகள் முற்றுகையிட்டனர். ஜீப்பில் சுற்றுலாப் பயணியுடன் இருந்த3 துறவிகளைச் சுட்டுக் கொன்றுவிட்டு சுற்றுலாப் பயணியைத் தீவிரவாதிகள கடத்திச்சென்றுவிட்டனர்.

ருங்டும் அருகே சானாஸ்கர் என்ற இடத்தில் உள்ள ஆட்டுப் பண்ணைக்கு சுற்றுலாப்பயணியைத் தீவிரவாதிகள் முதலில் கடத்திச் சென்றதாக ஜீப் டிரைவர் தெரிவித்தார்.

இதையடுத்து டிரைவர் குறிப்பிட்ட ஆட்டுப் பண்ணைக்குச் சென்று பார்த்தபோதுஅங்கு யாரும் இல்லை. சுற்றுலாப் பயணியுடன் தீவிரவாதிகள் வேறு இடத்துக்குச்சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தீவிரவாதிகளைத் தேடிக் கண்டுபிடித்து சுற்றுலாப் பயணியை மீட்கும் பணியில்போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடத்தப்பட்ட சுற்றுலாப் பயணி பற்றிஇதுவரை எந்த தகவலும் இல்லை. தீவிரவாதிகளும் எங்களைத் தொடர்புகொள்ளவில்லை.

யு.என்.ஐ.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...