For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

காஷ்மீர் விஷயத்தில் கருணாநிதி, பரூக்

சென்னை:

மாநில சுயாட்சி விஷயத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கும், எனக்கும் இடையே ஒரு பரந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்றுதமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

சென்னையில் சனிக் கிழமை செய்தியாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி வருமாறு:

கேள்வி: தங்களை சந்தித்துப் பேசிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா என்ன சொன்னார்?

பதில்: பத்திரிகைகளில் வெளிவந்தது போல் தனி நாடு எதுவும் கேட்கவில்லை என்றும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையான்மைக்கும்உள்ளடக்கிய ஒரு மாநில சுயாட்சியை தான் தாம் கேட்பதாகவும் தெரிவித்தார்.

காஷ்மீரைப் பொருத்தவரையில் தி.மு.க. கேட்பதுபோல் எல்லா மாநிலத்திற்குமான சுயாட்சியாக இல்லாமல், ஒரு சில விசேஷ அம்சங்கள் அங்கேதேவைப்படுகிறது என்றும், அதுகுறித்து விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் இவ்விஷயத்தில் மூர்க்கத்தமான, பிடிவாதக் கருத்தை தாம் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இவ்விஷயத்தில் எங்கள்இருவருக்கும் இடையே Broad agreement Esk. ஆனால், Fraud agreement இல்லை.

கேள்வி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அவர் விலகி விடுவார் என்ற பேச்சுஅடிபடுகிறதே நீங்கள் ஏதாவது ஆலோசனை கூறினீர்களா?

பதில்: தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகுவதாக எந்த முடிவிலும் அவர்இருப்பதாக தெரியவில்லை. என்னிடம் அதுபற்றி அவர் பேசவில்லை. அப்படியொருசூழ்நிலையில் ஆலோசனை சொல்வதற்கு இடமில்லை.

கேள்வி: பணம் படைத்தவர்கள் எல்லோரும் இப்போது சாதிக் கட்சிகள் ஆரம்பிக்கும்நிலை ஏற்பட்டுள்ளதே சாதிச் சங்கங்களுக்கு தடை விதிக்கப்படுமா?

பதில்: சாதிச் சங்கங்களுக்கு தடை விதிக்க சட்டத்தில் இடம் உண்டா என்பதை ஆராயவேண்டும். ஆனால், வன்முறையில் ஈடுபடக் கூடிய எந்தவொரு அமைப்பையும்தடை செய்ய சட்டத்தில் இடம் உண்டு.

சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் சங்கங்கள், கட்சிகள் ஏற்படுத்தி அரசியலில்நுழைந்து ஆதாயம் தேட முயற்சிக்கும் சக்திகளிடம் தமிழக மக்கள் விழிப்போடுஇருக்க வேண்டும்.

கேள்வி: தி.மு.க. கூட்டணியில் இருக்கும் டாக்டர் ராமதாஸ், தி.மு.க.வை கடுமையாகவிமர்சித்து வருகிறாரே?

பதில்: ராமதாசை பொருத்தவரையில் ஒரு நாளைக்கு ஒரு கருத்தைக் கூறி வருகிறார்.தி.மு.க.வை பற்றியும், தி.மு.க. ஆட்சியை பற்றியும் அவர் பல வித கருத்துக்கள் பேசிவந்தாலும், மொத்தக் கருத்தாக தி.மு.க கூட்டணியை விட்டு விலக மாட்டேன் என்றுசொல்லியிருப்பதை நான் வரவேற்கிறேன்.

கேள்வி: பா.ம.க .தலைவர்கள் குழு தங்களை சந்தித்தபோது இதுபற்றி பேசினீர்களா?

பதில்: அந்த சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை.

கேள்வி: பா.ம.க .மாநாட்டு அழைப்பிதழில் தலைமைச் செயலக கோட்டை படம்,பா.ம.க .கொடி பறப்பது போலவும் அச்சிடப்பட்டிருந்தது தொடர்பாக ஏதேனும்நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: அதில் எந்த விதி மீறலும் இல்லை.

கேள்வி: அரிசி, கோதுமை போன்ற பொருட்களின் விலையை மத்திய அரசுகுறைத்துள்ளதால் தமிழகத்திற்கு பலன் உண்டா?

பதில்: தமிழகத்தில் ஏற்கனவே ரேஷன் அரிசிக்கு 1700 கோடி ரூபாய் மானியம்வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு விலைக் குறைப்பால் வெறும் 50 கோடி ரூபாய்மிச்சப்படும். அவ்வளவு தான்.

கேள்வி: கரும்புக்கு டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் என்று அறிவித்தநீங்கள், 10 சதவீத சர்க்கரைச் சத்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளதற்கு கடும்எதிர்ப்பு கிளம்பியுள்ளதே?

பதில்: அமராவதி, தர்மபுரி ஆகிய இடங்களில் 10 சதவீத சர்க்கரைச் சத்துள்ளகரும்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அரியானாவில் 11 சதவீதம் சத்துள்ளகரும்புக்கு 1100 ரூபாய் தரப்படுகிறது. அதன்படி நான் 10 சதவீதம் சத்துள்ளகரும்புக்கு 1000 ரூபாய் என்று அறிவித்துள்ளேன்.

கேரளாவில், மேற்கு வங்கத்தில் 800 ரூபாய் தான் தரப்படுகிறது. அங்கெல்லாம்கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைதி காக்கின்றனவே.

கேள்வி: தமிழகத்தில் சிமென்ட் விலை அதிகம் என்று த.மா.கா. கூறி வருகிறதே?

பதில்: அதற்கு அரசு ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் வெளிமாநிலங்களில்இருந்து வாங்கி வந்து விற்பனை செய்யலாம். அதற்கு அரசு தடையாக இருக்காது.

கேள்வி: தி.மு.க .கூட்டணியில் த.மா.கா. சேருமா?

பதில்: தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன என்றார் முதல்வர்கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X