For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோரின் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்று இயக்குநர் விக்ரமன் கூறியுள்ளார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தென்னிந்திய இயக்குநர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:

எனது படங்களின் விளம்பரங்களில் விக்ரமனின் என்று பெயர் போடுவதில்லை. ஏனெனில் படத்தயாரிப்பின் பின்னணியில் இணை இயக்குநர்கள், நடிக, நடிகையர்,டெக்னீஷியன்கள் என்று பலர் இருக்கிறார்கள்.

விக்ரமனின் என்று பெயர் போடுமளவுக்கு நான் இன்னும் பாலச்சந்தர், பாரதிராஜா அளவுக்கு வளரவில்லை என்றார்.

இயக்குநர் சேரன் பேசுகையில், விக்ரமன் இங்கு பேசியது எனக்கு நெத்தியடி. ஏனெனில் சேரனின் பொற்காலம், சேரனின் தேசிய கீதம் என்றுபடவிளம்பரங்களில் பெயர் போட்டுக் கொண்டது தவறு. அதை இப்போது உணர்ந்து கொண்டேன்.

வெற்றிக்கொடி கட்டு பட விளம்பரத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சேரன் என்று போட்டுள்ளது தவறு என்று நினைத்தால் மன்னித்துக்கொள்ளவும் என்று அடக்கத்துடன் கேட்டுக் கொண்டார்.

சேரன் பேசியதற்குப் பிறகு மீண்டும் எழுந்த விக்ரமன், சேரனின் மனதைப் புண்படுத்தும்படி பேசவில்லை. பொற்காலம் போன்ற படங்களை இயக்கிய சேரன்,அவரது பெயரை படவிளம்பரங்களில் போட்டுக் கொள்ளும் தகுதி அவருக்கு இருக்கிறது என்று புகழ்ந்தார்.

முன்னதாக, நடந்த நிர்வாகிகள் தேர்வில் தலைவராக இயக்குநர் பாரதிராஜா அறிவிக்கப்பட்டார். பாலுமகேந்திரா, ஆர்.சி.சக்தி ஆகியோர்துணைத்தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிற நிர்வாகிகள் விவரம்:

தலைவர் பாரதிராஜா, துணைத் தலைவர்கள் ஆர்.சி.சக்தி, பாலுமகேந்திரா, பொதுச்செயலாளர் சண்முக சுந்தரம், ஆர்.கே.செல்வமணி, இணைப்பொதுச்செயலாளர்சண்முக சுந்தரம், டி.ஆர்.விஜயன், பாபுகணேஷ், பொருளாளர் வி.சேகர், செயற்குழு உறுப்பினர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், சித்ரா லட்சுமணன்,எஸ்.ஏ.சந்திரசேகர், நாசர், சேரன், ஆர்.சுந்தர்ராஜன், லியாகத் அலிகான், ராமதாஸ், ரஞ்சித் தம்பி துரை, ஷெரீப் யார் கண்ணன் ஆகியோர் ஏகமனதாகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கடல்பூக்கள் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளதால் கூட்டத்தில் பாரதிராஜா கலந்துகொள்ளவில்லை. அவர் சார்பாக ஆண்டு அறிக்கையைஇயக்குநர் பாலுமகேந்திரா வாசித்தார்.

நிகழ்ச்சியில் தேசிய மற்றும் மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்ற இயக்குநர்கள் பாலா, விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார், பார்த்திபன், மு.களஞ்சியம்ஆகியோர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

இயக்குநர் பார்த்திபன் இக்கூட்டத்தில் பேசுகையில், ஹவுஸ்புல் படத்திற்காக கிடைத்த பதக்கத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயை இயக்குநர் சங்கத்திற்குவழங்குவதாகக் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X