தமிழகத்தில் இன்று
800 மில்லியன் ஆண்டு பழமையான 500 டினோசர் முட்டைகள் மீட்பு
பீஜிங் (சீனா):
மத்திய சீனாவில் மலைப் பகுதியில் புதைந்து கிடந்த டினோசர் முட்டைகளை எடுத்தவிற்ற கும்பலிடமிருந்து விற்கப்படாமல் இருந்த 500 முட்டைகளை போலீஸார்கைப்பற்றினர்.
பீஜிங்கிலிருந்து வெளியாகும் யூத் டெய்லி என்ற பத்திரிக்கையில் இந்த செய்திவெளியாகியுள்ளது.
இந்தக் கும்பல் இதுவரை 1500 டினோசர் முட்டைகளை சட்டத்திற்கு புறம்பாகவிற்றிருக்கலாம் என்று தெரிகிறது. ஹூபாய் மாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகள்கிங்லாங் மலைப் பகுதியில், 4.2 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மண்ணைத்தோண்டியபோது, டினோசர் முட்டைகள் கிடைத்தன.
இந்த முட்டைகளை 10 முதல் 30 யென் வரை (1.2 முதல் 3.6 டாலர்) விற்றுள்ளனர். ஹிவெய்ஜுனி என்பவர் கடந்த ஒரு வருடமாக இதுபோல முட்டைகளை விற்றுவந்துள்ளார். மொத்தம் 1500 முட்டைகளை 100 யென்னுக்கு (12 டாலர்) விற்பனைசெய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக 36 வயதுடைய டயர் தொழிற்சாலை ஊழியர் ஒருவரைகடந்த ஜுன் மாதம் போலீஸார் கைது செய்தனர்.
ஜூன் 12-ம் தேதி நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி கண்டுபிடிக்கப்பட்ட 500முட்டைகளில் 493 முட்டைகள் மட்டுமே உண்மையான டினோசர் முட்டைகள்.இத்துடன் 403 பழம்பொருட்களும் மீட்கப்பட்டன.
இப்போது கிடைத்துள்ள 500 டினோசர் முட்டைகளும் 60 முதல் 800 மில்லியன்வருடங்கள் பழமை வாய்ந்தது என கருதப்படுகிறது.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications