For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்

By Staff
Google Oneindia Tamil News

ராஜ்குமார் கடத்தலுக்கு நடிகர் சங்கம் கண்டனம்

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரைக் கடத்தியதற்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்திவிட்டு சங்கத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஆந்திராவில் என்.டி.ராமராவ்,நாகேஸ்வரராவ்,கேரளத்தில் பிரேம் நசீர் போன்றவர்களைப் போல் கர்நாடகத்தில் அதிகம்மதிக்கப்படுபவர் ராஜ்குமார்.

பொதுவாகவே திரைப்படக் கலைஞர்கள் எல்லாருமே நாட்டுப் பற்றுமிக்கவர்கள்.இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்சத்திர இரவு நிகழ்ச்சிகள் நடத்திஅதன் மூலம் ஏராளமான நிதியை வசூலித்துக் கொடுத்துள்ளனர். ஆகவே, திரைப்படக்கலைஞர்கள் யாருக்கும் விரோதியல்ல. யாரையும் விரோதியாக நினைப்பவர்களும்அல்ல.

ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியது எந்தவிதத்திலும் நியாயமில்லை. ராஜ்குமார்கடத்தப்பட்டது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் மிகுந்தகவலை அடைந்துள்ளனர். நம்பிக்கையின் அடிப்படையில் வீரப்பன் நடமாட்டம் உள்ளபகுதிக்கு ராஜ்குமார் வந்துள்ளார். ஆனால், இப்போது அவர் கடத்தப்பட்டதன் மூலம்அந்த நம்பிக்கை தகர்ந்து விட்டது.

உடனடியாக ராஜ்குமாரையும் அவருடன் கடத்தியவர்களையும் வீரப்பன் விடுதலைசெய்யவேண்டும் என்று அனைத்துத் திரைப்படக் கலைஞர்கள் சார்பிலும் நடிகர் சங்கத்தலைவர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக-கர்நாடக அரசுகள் அதற்காக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்குநடிகர் சங்கத்தின் உதவி எப்போதும் உண்டு என்று விஜயகாந்த் கூறியிருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X