அமெரிக்காவில் 98 இடங்களில் காட்டுத் தீ
வாஷிங்டன்:
அமெரிக்காவில் 98 இடங்களில் எரியும் பயங்கர காட்டுத் தீயை அணைக்க 25 ஆயிரம் வீரர்கள் போராடிவருகிறார்கள். ராணுவமும் வரவழைக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் புளோரிடா உள்பட 10 மாகாணங்களில் சுமார் 98 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.தொடக்கத்தில் 81 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் எரிந்த இந்த காட்டுத் தீ, இப்போது 5 லட்சத்து 26 ஆயிரம்ஹெக்டேர் நிலத்தில் பற்றி எரிகிறது.
தீயணைக்கும் படையினர் 25 ஆயிரம் பேரும், 3 ஆயிரம் ராணுவ வீரர்களும் தீயை அணைக்க போராடிவருகிறார்கள்.
இந்த நிலையில் கூடுதலாக மேலும் 2 ராணுவ பட்டாலியன்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர ஓய்வுபெற்ற தீ அணைக்கும் படை வீரர்களும் காட்டுத்தீயை அணைக்க வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே பலத்த காற்று காரணமாக தீ வேகமாக மேலும் பல பகுதிகளுக்கும் பரவி வருகிறது என்றுதீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications