For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருகிறது 3-வது அணி

By Staff
Google Oneindia Tamil News

அ.தி.மு.க, த.மா.கா இடையிலான விரிசல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் த.மா.காவினர். சில தினங்களுக்கு முன்பு,ஈ.வி.கே சம்பத் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா பேசியது பலரையும்வியப்பில் ஆழ்த்தியது.

அ.தி.மு.க ஆட்சி என்பது எம்.ஜி.ஆரின் சொத்து அதை யாரும் பங்குபோட்டுக்கொள்ள முடியாது என்று ஜெயலலிதா பேசியதைத் தொடர்ந்துத.மா.காவினர் ஜெயலலிதா மீது ஏககோபத்தில் இருந்தனர். தற்பொழுது, 29-ம் தேதித.மா.கா செயற்குழு அ.தி.மு.க கூட்டணிக்கு முடிவு கட்டும் என்கிறார்கள்த.மா.காவில்.

அதுவும் தவிர, தலைவரையும் மேடையில் வைத்துக்கொண்டு ஆட்சியில் பங்கு,அதிகாரத்தில் பங்கு என்று இனி யாரும் பேச வேண்டாம் என்ற ஜெயலலிதா பேசுவதுஎன்ன நியாயம். கூட்டணி கட்சியாக இருக்கிறோமே, இப்படிப் பேசுவதற்கு முன் ஒருவார்த்தை கேட்டிருக்க வேண்டாமா? ஜெயலலிதா தனது சுயரூபத்தை காட்டிவிட்டார்.

1996-ம் வருடம், காங்கிரஸில் இருந்து வெளியே வந்தது எதற்காக? டெல்லி தலைமை,அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க நினைத்தது. எவ்வளவோ எடுத்துச்சொல்லியும்நரசிம்மராவ் கேட்க மறுத்தார்.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்த பின்பு த.மா.காஉதயமானது. அதே வேகத்தில் தனித்து நின்றிருக்க வேண்டும் , அப்பொழுதும்கட்சியில் உள்ள சிலர் கெடுத்தார்கள். தி.மு.கவோடு கூட்டணி என்றார்கள். அந்தநேரத்தில் ரஜினிகாந்த் முழுவதுமாக த.மா.காவை ஆதரித்து வந்தார். தலைவர்கொஞ்சம் பேசியிருந்தால் த.மா.காவோடு ரஜினியையும் சேர்த்து மற்ற சிறியகட்சிகளுடன் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைத்திருக்கலாம். யார்கேட்டார்கள்.? கூட்டணி தி.மு.கவோடு என்றார்கள்.

காமராஜர் ஆட்சிதான் கனவு என்று சொல்லிவிட்டு, திராவிடகழகங்களின் தோள்களில்எத்தனை நாட்கள் தான் தொங்கிக்கொண்டிருக்கமுடியும்.? தி.மு.க வைவிட்டுவெளியே வர முடிவு செய்தார்கள்.

ஏதோ தனியாக யோசிக்கிறார்கள் என்று நினைத்தால் அ.தி.மு.க வோடு கூட்டணி.எதற்காக காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்தோமோ, அந்த கொள்கையை விட்டுஅ.தி.மு.க வோடு கூட்டணி அமைத்தோம். கூட்டணியில் சேருவதற்கு யோசித்தபொழுது, எதிர்காலத்தில் நீங்கள் தான் ஆட்சியமைக்க வேண்டிய சூழ்நிலை வரும்என்று கூட சொன்னார்கள்.

மகுடம், ஆட்சி இதெல்லாம் சரி, சராசரி மரியாதைகூட அங்கே இல்லைன்னா என்னஅர்த்தம். போதும் எத்தனை நாளைக்குத்தான் திராவிட கழங்களின் பின்னாலேயேதொங்கிக்கொண்டிருப்பது, நிறுத்துவோம். 29-ம் தேதி செயற்குழுவில் மூன்றாவதுஅணிக்கான தீர்மானம் தான் சரி யான தீர்வு. இதைத்தான் தலைவரிடம் நாங்கள்எதிர்பார்க்கிறோம் என்கிறார் தென் மாவட்டத்தில் செல்வாக்கான தலைவர்.

த.மா.கா தரப்பிலிருந்து, ஜெயலலிதா பேச்சுக்கு பதிலடி கிடைக்கும் எனவும்எதிர்பார்க்கவில்லை. கூட்டணி ஆட்சிதான் எதிர்காலத்தில் அமையும், மேலும்அ.தி.மு.க எத்தனை இடத்தில் போட்டியிட்டாலும் அ.திமு.கவிற்கு தனி மெஜாரிட்டிகிடைக்காது என்று மூப்பனார் தெரிவித்திருப்பதும் ஜெயலலிதா அதிர்ந்து போனவிஷயம்.

இதற்கு நடுவே, மூப்பனாரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் ஜெயலலிதா தரப்பில்நடந்தது. திராவிடக் கழக தலைவர் கி.வீரமணியும், ஜெகவீரபாண்டியனும் தான்மூப்பனாரை ஜெயலலிதாவின் தூதர்களாக சந்தித்துப் பேசினார்கள்.

மூப்பனாரின் மனதில் இனி மன்னித்து அல்லது பொறுத்துக்கொண்டு மறுபடியும்அ.தி.மு.கவோடு கூட்டணி அமைக்கும் எண்ணமேயில்லை என்று மூப்பனார்தெரிவித்துவிட்டதாக சொல்கிறார்கள் த.மா.கா பிரமுகர்கள்.

ஜெயலலிதா ஈ.வி.கே.சம்பத் புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் பொழுது,வலிமையான ஒரு தலைவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று மக்கள்நினைக்கிறார்கள் என்று மூப்பனாரை வைத்துக்கொண்டு பேசியதை மிகவும்அவமானமாக நினைக்கிறார்கள் த.மா.கா.வினர். இதற்கு ஒரு முடிவு கட்டியேதீருவோம் என்று முடிவெடுத்து விட்டார்கள்.

முஸ்லீம் லீக், முதலியார் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை ஒன்று திரட்டி மூன்றாவது அணி பற்றிய பேச்சுக்கள்ஆரம்பமாகும், இன்னும் பல கட்சிகளையும் சேர்த்து கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில்பங்கு என்ற முடிவோடு செயல்படுவோம் என்கிறார்கள் த.மா.கவினர்.

அடுத்த வாரம் சிதம்பரத்தில் நடக்க இருக்கும் த.மா.கா செயற்குழுவில் த.மா.காதலைவர் சிதம்பரம் அ.தி.மு.கவுக்கு எதிரான தீயை கொளுத்தி வைப்பார்என்கிறார்கள் த.மா.காவினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X