For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாட்டு கார் வாங்க அலைமோதிய இலங்கை பிரதமர்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை நாடாளமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு பிரதமர் ரத்னஸ்ரீவிக்கிரமநாயகே உள்பட 18 அமைச்சர்கள் வரி இல்லாமல் அயல் நாட்டுக் கார்களைவாங்க அலை மோதியதாக தெரிய வந்துள்ளது.

ஒரு வாரத்திற்கும் குறைவாகவே எம்.பிக்களாக இருந்தவர்களும் கூட இத்திட்டத்தைப்பயன்படுத்தி காரை வாங்கியுள்ளதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எம்.பிக்கள் வெளிநாடுகளிலிருந்து கார்களை வாங்க அரசு முன் பணம் வழங்குகிறது.இந்த பணத்தை எம.பிக்கள் 48 மாத காலத்திற்குள் திருப்பி செலுத்தினால் போதும்.முன் பணத்திற்கு எந்த விதமான வட்டியும் கிடையாது. இத்திட்டம் மூலம் அரசுக்கு 71மில்லியன் டாலர் செலவாகும். 10 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும்.

இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கே நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முன்,ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சியைச் சேர்ந்த 178 எம்.பிக்கள், தங்கள் பெயர்களைவரி ஏதும் இல்லாமல் அயல் நாட்டுக் கார் வாங்கும் பட்டியலில் சேர்க்குமாறுவலியுறுத்தினர். மீண்டும் தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகத்தினாலேயேஇவ்வாறு அவர்கள் அவசரப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தின்படி, உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப கார்களை தேர்வு செய்துகொள்ளலாம். கார்களுக்கு விலை உச்சவரம்பு 26,500 டாலர்களாகும். இந்த வரம்பிற்குஉட்படடு ஜப்பானின் மிட்சுபிஷி மான்டரோ, நிசான் பாட்ரோல் , லான்ட்ரூசியர்ப்ராடோ போன்ற கார்களில் ஒன்றை வாஙகிக் கொள்ளலாம்.

கார் வாங்க பிரதமர் உள்ளிட்ட பலர் அவசரப்பட்டபோதிலும் அதிபர் சந்திரிகாவின்தம்பி உட்பட பலர் இந்த வசதியைப் பெற மறுத்து விட்டனர். தகவல் துறை மந்திரிமங்களா சமரவீரா, நீதித்துறை மந்திரி பெய்ரி, எதிர்கட்சித் தலைவர் விக்கிரமசிங்கேஆகியோர் இந்த வசதியைப் பெற மறுத்தவர்களில் முக்கியமானவர்கள்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வரி விலக்கு பெற்று கார் வாங்குபவர்களுக்குவருடத்திற்கு வட்டியில்லாமல் நான்கு கார் சக்கரங்களும் வழங்கப்படும்.

ஐ.ஏ.என்.எஸ்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X