For Daily Alerts
ராஜ்குமார் கடத்தல்: பிரதமருடன் கிருஷ்ணா ஆலோசனை
பெங்களூர்:
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் குறித்து பிரதமர் வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோருடன்கர்நாடக முதல்வர் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தத் தகவலை கர்நாடக அமைச்சர் சந்திரசேகர் கூறினார். அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் தமிழக, கர்நாடகஅரசுகள் எடுத்துள்ள முயற்சிகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
ராஜ்குமார் கடத்தப்பட்டு செவ்வாய்க்கிழமையோடு 37 நாட்கள் ஆகிவிட்டன. இப்போது காட்டுக்குள் உள்ளநக்கீரன் ஆசிரியர் கோபால் 3 அல்லது 4 நாட்களில் நல்ல செய்தியுடன் திரும்பி வருவார் என நம்புகிறோம்என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!