காஷ்மீர் பிரச்சினை: 3-வது நாட்டின் உதவி தேவை .. கூறுகிறது சீனா
பீஜிங்:
ஜம்மு காஷ்மீர் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.
இருப்பினும் காஷ்மீர் பிரச்சினை, இந்தியாவுக்கும், பாகிஸ்தானிற்கும் இடையிலானது. இதில் சீனா தலையிடாது என்றும் சீனத் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு, சண்டை நிறுத்தத்திறு அழைப்பு விடுத்தது. பேச்சு துவங்கிய சில நாட்களில், பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தையில்சேர்த்துக் கொள்ள கோரியது. இதை இந்தியா நிராகரிக்கவே, பேச்சுவார்த்தை முறிந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானையும், பேச்சுவார்த்தையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனா கருத்துத் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத் துறை துணைஅமைச்சர் வாங்க் யீ கூறுகையில், இந்தப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. எனவே காஷ்மீர்குறித்த பேச்சுவார்த்தையில், பாகிஸ்தானையும், இந்தியா சேர்த்துக் கொள்ளலாம்.
காஷ்மீர் பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இதைத் தீர்ப்பது இருநாடுகளுக்கும் முக்கியமானது. எனவே, சர்வதேச சமுதாயத்தின் உதவியுடன்பிரச்சினையைத் தீர்க்கலாம் என சீனா கருதுகிறது என்றார் வாங்க்.
ஐ.ஏ.என்.எஸ்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!