For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை நீதிமன்றத்தில் பரபரப்பூட்டிய பாட்ஷா

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை குண்டு வெடிப்பு வழக்குத் தொடர்பாக செவ்வாய்க்கிழமை 167 பேர் ஆஜர்செய்யப்பட்டனர். அப்போது அதிகாரிகளுக்கும், அல் உம்மாத் தலைவர்பாட்ஷாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

கோவை குண்டு வெடிப்பு வழக்கு கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தவழக்கில் அல் உம்மா இயக்கத்தின் தலைவர் பாட்ஷா, கேரள மக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 167 பேரும் ஆஜர் செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நீதிபதி தணிகாசலம், வக்கீல் நியமித்துக் கொள்ளாத 51 பேரும் வக்கீல்வைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவ்வாறு வக்கீல் நியமித்துக்கொள்ளாவிட்டால், இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் வக்கீல் நியமிக்க ஏற்பாடுசெய்யப்படும் என்றார்.

இதற்கு ஒப்புக் கொண்டு பாட்ஷா, நீதிமன்றத்தில் அமர்ந்தார். ஆனால், நீங்கள்வைக்கும் வக்கீல்களை நாங்கள் ஏற்க டியாது. நாங்கள் நயமிக்கும் வக்கீலுக்கு அரசுசம்பளம் வழங்க வேண்டும் என பாட்ஷா கூறினார்.

நீதிபதி தணிகாசலம், இதனை ஏற்க மறுத்து வழக்கை செப்டம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து, இருக்கையை விட்டு எழுந்து சென்று விட்டார்.

பின்னர் நீதிமன்ற வளாகத்திற்குள் பாட்ஷாவுக்கும், சி.பி.சி.ஐ.டி பிரிவின் ஐ.ஜி பரம்வீர்சிங்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த வழக்கில் போலீசாருக்கு எவ்விதத்திலும் ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம்.எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டது. கோர்ட்டுக்கு இனிநாங்கள் வர மாட்டோம் என அதிகாரிகளிடம் பாட்ஷா மற்றும் மதானி ஆகியோர்வாக்குவாதம் செய்தனர்.

நீதிமன்றத்திலிருந்து கலைந்து செல்லும்போது , பாட்ஷா நிருபர்களிடம் ஒரு துண்டுபிரசுரத்தைக் கொடுத்தார். அதில், சில கோரிக்கைகளை எழுதிக் கொடுத்திருந்தார்.அதில் பாரதீய ஜனதாக் கட்சி, முஸ்லிம்களின் ஓட்டுக்களை கவர,அவர்களைஆதரிப்பதாகக் கூறி வருகிறது.

முஸ்லிம்களின் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும்என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்காகவே இக்கட்சியின் தலைவர்பங்காரு லட்சுமணன் இவ்வாறு கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி, முஸ்லிம் மக்களுடன் நெருங்க வேண்டுமானால், பாபர் மசூதிஇடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் மசூதியைக் கட்ட வேண்டும். பொது சிவில்சட்டம் என்ற கோஷத்தைக் கைவிட வேண்டும். அரசியல் சட்டம் பிரிவு 370பாதுகாக்கப்பட வேண்டும்.

மதக் கலவரங்கள், குண்டு வெடிப்பு வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறவேண்டும். இந்த வழக்குகளில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்என்ற கோரிக்கைகள் அந்த துண்டுப் பிரசுரத்தில் இடம் பெற்றிருந்தன.

அரசு தரப்பு வக்கீலாக நியமிக்கப்பட்டிருந்த சவுந்தர்ராஜன் நீதிமன்றத்தில்ஆஜராகவில்லை. அவர் செப்டம்பர் 11-ம் தேதி உடுமலை குண்டு வெடிப்பு வழக்குவிசாரணை நடந்தபோது, வழக்குகளிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X