எட்டு பேர் நரபலி? .. அதிர்ச்சியில் மதுரை
மதுரை:
மதுரை மாவட்டத்தில் எட்டு பேர் நரபலி கொடுக்கப்பட்டுள்ளதாக மர்மச் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தியால் மதுரை மாவட்டமே பீதியில் உறைந்து போயிருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் பரபரப்பானபேச்சுக்களினால் நிலை கொள்ளா அமைதியில் இருக்கிறது மதுரை.
மதுரையை அடுத்துள்ள அழகர்கோவில் அழகாபுரி கிராமம். இந்த ஊரில் அடிக்கடி மர்மச் சாவுகள்நடந்தன. வயல் வெளியிலும், மந்தையிலும், கிணற்றிலும் இதுவரை நான்கு பேர் பிணமாக கிடந்தனர். இவைகள்அனைத்தும் தற்கொலையாக இருக்கலாம் அல்லது தவறி கிணற்றில் விழுந்தும் இருக்கலாம் என்று கூறப்பட்டது.
பிணமாக கிடந்தவர்களின் கண்கள் தோண்டப்பட்டும், கை கால்கள் முறிக்கப்பட்டும் இருந்தன. நரி அல்லது வேறுஏதாவது மிருகங்கள் கண்களை தோண்டியிருக்கலாம் என்று மக்கள் கருதி வந்தனர். இந்த சாவுகள் அனைத்தும்அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் நடந்ததால் பொதுமக்கள் மத்தியில் பீதி கிளம்பியது.
அழகாபுரி கிராம மக்கள், சற்று கவலையுடனேயே இதை கவனித்து வந்தனர். கிராமத்தில் உள்ள இளைஞர்கள்சிலர் திரண்டனர். பேயோ பூதமோ காத்துகருப்புன்னு ஊர்முழுக்க ஒரே பேச்சா இருக்குது. என்னன்னு பார்க்காமபோயிட்டா நம்ம இந்த கிராமத்துல இருந்து என்ன பயன் என்று பேசிக் கொண்டார்கள். திட்டமிட்டார்கள்.
ராத்திரி பகல்னு பார்க்காம தொடர்ந்து கிராமத்தை நோட்டம் விடுவோம். என்ன நடக்குதுன்னு தான் பாப்பமேஎன்று உறுதி எடுத்துக் கொண்டனர். அமாவாசை, பெளர்ணமி இந்த இரண்டு தினங்களும் அவர்களுக்குமுக்கியமான நாளும் கூட காரணம் அம்மாவாசை, பெளர்ணமி இரவுகளில் தான் சாவுகள் நடக்கின்றன.
புதன்கிழமை பெளர்ணமி இரவு. வழக்கம் போலவே இளைஞர்கள் கிராமத்தை காவல் காத்து வந்தனர். ஊருக்குவெளியே மந்தைக்கு சென்று கொண்டிருந்த ஒருவரை பார்த்துக் கொண்டனர். நம்ம கிராமத்து ஆளுதான்மந்தைக்கு போறான் என்று யோசித்தபடியே கண்காணித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஆட்டோ ஒன்றுசம்பந்தமில்லாமல் அங்கே வந்தது. உஷாரானார்கள் இளைஞர்கள்.
ஆட்டோவில் இருந்து சிலர் இறங்கினார்கள். கிராமத்து வாலிபர் அவர்களுடன் கைகலப்பில் ஈடுபடுவது தூரத்தில்இருந்து தெரிந்தது. அவ்வளவுதான் பாய்ந்து சென்ற இளைஞர்கள். ஆட்டோவில் வந்தவர்களை பிடிக்க முயற்சிசெய்ய இருவர் தப்பியோடி விட்டனர். ஒருவர் மட்டும் மாட்டிக் கொண்டார்.
பிடிபட்டவனை விசாரிக்க, அவன் சொன்ன தகவலில்தான் மதுரையே ஆடிப்போயிருக்கிறது. அழகாபுரிகிராமத்துப் பக்கத்துலேயே ஒரு காளிகோயில் இருக்கு. அந்த கோயிலில் பெளர்ணமி, அமாவாசை அன்னிக்குபெரிய அளவில் பூஜைகள் நடக்கும்.
சக்திவாய்ந்த அந்த காளிக்கு 49 பேரை நரபலி கொடுக்க காளி உத்திரவிட்டுள்ளதாகவும், இதுவரை எட்டு பேரைநரபலி கொடுத்துள்ளதாகவும் மேலும் 41 பேரை நரபலி கொடுக்க தேடி வருவதாகவும் அந்த ஆசாமி கூறியதாகசொல்லப்படுகிறது. பிடிபட்ட ஆசாமி வேறு சிலரால் ஏவி விடப்பட்ட கூலித்தொழிலாளி என்று கிராமத்தில்கூறியதாகவும் கூறப்படுகிறது.
விஷயம் தெரிந்த போலீஸார் உடனே அங்கு விரைந்தனர். பிடிபட்ட ஆசாமியை தங்களிடம் ஒப்படைக்குமாறுகேட்டனர். அதற்கு கிராமத்து இளைஞர்கள் மறுத்ததாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டஆட்சித் தலைவர் தங்கவேலு, எஸ்.பி சங்கர் ஜூவால் ஆகியோர் அழகாபுரி கிராமத்திற்கு சென்று விசாரணைநடத்தி வருகின்றனர்.
போலீஸ் தரப்பில் இருந்து இந்த சம்பவங்கள் முழுவதுமாக மறுக்கப்படுகிறது. விசாரித்து வருகிறோம். எதையும்இப்பொழுது சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். மாலைக்குப் பிறகு தான் எதையும் உறுதியாகச்சொல்லமுடியும் என்கிறார்கள் மதுரை மாவட்ட காவல்துறை அதிகாரிகள்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!