For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை: ஹெலிகாப்டர் விபத்தில் அமைச்சர், 14 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை விமானப் படையின் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த துறைமுகங்கள்துறை அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் உள்பட 14 பேர் இறந்தனர்.

சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அவர் ஹெலிகாப்டரில் அம்பாராவுக்குச்சென்று கொண்டிருந்தார். கொழும்புவின் கிழக்கே கேகல்லே மாவட்டத்தில் பைபிள் ராக் மலைப் பகுதியில் அந்தஹெலிகாப்டர் திடீரென விழுந்தது.

கிளம்பிய சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நடந்துவிட்டது.

மலை முகடுகளில் மோதி வெடித்து நொருங்கியது. இதில் அஷ்ரப், 2 விமானிகள், அமைச்சரின் 3 பாதுகாப்புஅதிகாரிகள், 9 கட்சித் தொண்டர்கள் ஆகியோர் இறந்தனர்.

விபத்துக்குள்ளான இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாகும். விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்தரைக்கப்பாட்டு நிலையத்துடன் பேசிய விமானி, பனிமூட்டம் காரணமாக சரியாக எதையும் பார்க்க முடியவில்லைஎனவும், இதனால் ஹெலிகாப்டரின் பறக்கும் உயரத்தை குறைக்கப் போவதாகவும் கூறினார்.

ஆனால், அவர் பேசி முடித்த சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிவிட்டது. அது எம்-17 ரகபோக்குவரத்து ஹெலிகாப்டராகும். இறந்தவர்களின் உடல்களை அந்த மலைப் பகுதியில் வசிக்கும் மக்களே கண்டுஎடுத்துவிட்டனர்.

ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அஷ்ரப் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ஆளும்சந்திரிகா குமாரதுங்காவின் கட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறியிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு:

இந் நிலையில் வெள்ளிக்கிழமை கொழும்புவில் விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு வெடித்து 8 பேர்இறந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 10ம் தேதி நடக்கவுள்ளதேர்தலையொட்டி அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தை புலிகள் முறியடிக்கலாம் எனக் கருதப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.கொழுபுவுக்குள் மட்டும் 23 கரும்புலிகள் நுழைந்துள்ளதாகவும், இவர்கள் மனித வெடிகுண்டுகளாகசெயல்படவுள்ளதாகவும் கொழும்பு காவல்துறை தலைவர் லியநாகே கூறினார்.

கொழும்புவில் பிச்சைக்காரர்களைக் கூட புலிகள் உளவு பார்க்க பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

போர் முனையில்:

இந் நிலையில் யாழ்பாணத்தில் புலிகளை முறியடிக்க புதிய மல்டி பேரல் ராக்கெட்டுகளுடன் இலங்கை வீரர்கள்களமிறங்கினர். ஆனால், அவர்களால் புலிகளின் எதிர் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியவில்லை.

பலத்த விமானத் தாக்குதலையும் மீறி ராணுவத்தின் மீது புலிகள் பலத்த பதிலடித் தாக்குதல் நடத்தி வருகினறனர்.கொழும்புத்துறை, சரசலாய் பகுதிகளை மீட்கும் ராணுவத்தின் முயற்சிகளை புலிகள் முறியடித்துவிட்டனர்.

இந்தப் புதிய தாக்குதலில் 125 வீரர்கள் இறந்துள்ளனர். புலிகள் தரப்பில் 230 இறந்ததாக ராணுவம் கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X