ஹாக்கி: தென் கொரியாவிடம் இந்தியா தோல்வி
சிட்னி:
ஆண்களுக்கான பி பிரிவு ஹாக்கிப் போட்டியின் தகுதிச் சுற்றில் தென் கொரியாவுக்குஎதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியுற்றது.
வியாழக்கிழமை காலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொரியா 2 கோல்கள் போட்டுவெற்றி பெற்றது. இந்தியா கோல் எதுவும் போடவில்லை.
இந்த வெற்றியை அடுத்து இந்தியாவின் அரையிறுதிச் சுற்று வாய்ப்பு கிடைப்பதில் சற்றுபின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சிட்னி ஒலிம்பிக்கில் தென்கொரியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி இது. இந்தஆட்டத்தின் முடிவில் தென் கொரியா 5 புள்ளிகளும், இந்தியா 4 புள்ளிகளும்பெற்றுள்ளன.
ஆட்டம் தொடங்கியது முதல் முடிவு வரை ஆட்டம் தென் கொரிய வீரர்கள்கையில்தான் இருந்தது. தற்காப்பு, கோல் போட முன்னேறுவது என அனைத்துவிதத்திலும் தென் கொரிய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர்.
இடைவேளையின்போது தென் கொரியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில்இருந்தது. 28-வது நிமிடத்தில் முதல் கோல் போட்டார் சாங் டேய்.
ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் கேப்டன் காங் கோயன்-ஊக் இரண்டாவது கோல்அடித்தார். அதன் பிறகு தென் கொரிய அணியினருக்கு கோல் போட பல வாய்ப்புகள்கிடைத்தன. ஆனால், அனைத்தும் வீணடிக்கப்பட்டன.
இந்தியாவுக்கு இரு பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இரண்டையும்இந்திய வீரர்கள் வீணடித்துவிட்டனர். தென் கொரிய வீரர்களும், இந்தியாவுக்குக்கோல் போடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தராமல் சிறப்பாக விளையாடினர்.
இந்த வெற்றியின் மூலம் 1998 பாங்காக் ஆசியப் போட்டியில் இறுதி ஆட்டத்தில்இந்தியாவிடம் தோற்றதற்கு தென் கொரியா பழிதீர்த்துக் கொண்டது.
சிட்னி ஒலிம்பிக்குக்கு முன்பு நடந்த இரு ஆட்டங்களில் ஒன்றில் 6-1 என்ற கணக்கில்தென் கொரியா வென்றது.மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவானது.இப்போது நடந்த மூன்றாவது ஆட்டத்திலும் தென் கொரியா வென்றுள்ளது.
இந்தியா அடுத்து ஸ்பெயின் மற்றும் போலந்து அணிகளை எதிர்த்து விளையாடஉள்ளது. அந்த இரண்டிலும் வென்றால்தான் அரையிறுதிக்குள் இந்தியா நுழையமுடியும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்த்துவிளையாடுகிறது.
அன்றைய தினம் ஆஸ்திரேலியாவும் தென் கொரியாவும் மோதுகின்றன. இருஅணிகளுக்கும் அன்றைய போட்டி முக்கியமானது என்றாலும், அந்த போட்டியின்முடிவும் இந்தியாவுக்கான அரையிறுதி வாய்ப்பை நிர்ணயிக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications