For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பதவிக்காக அலையும் அவசியம் சிதம்பரத்திற்கு இல்லை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பா.ஜ.க.விடம் பதவி கேட்டு அலைய வேண்டிய அவசியம் ப.சிதம்பரத்திற்கு இல்லைஎன்று தமிழக பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சிதம்பரத்தின் தீவிரஆதரவாளரான ப.ரங்கநாதன் எம்.எல்.ஏ.

த.மா.கா.வில் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருப்பவர் புரசைவாக்கம் சட்டமன்றஉறுப்பினர் ரங்கநாதன். சிதம்பரத்தை போலவே தீவிர ஜெயலலிதா எதிர்ப்பாளர்.த.மா.கா.வில் உள்ள தி.மு.க. விசுவாசிகளில் முக்கியமானவர்.

சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க. வைஆதரித்துப் பேசியதால் கட்சியை விட்டு சஸ்பென்ட் செய்யப்பட்டார். பின்பு சிதம்பரம்சிபாரிசு காரணமாக மீண்டும் சேர்க்கப்பட்டார். ஆனாலும், அவரது தி.மு..க விசுவாசம்தீரவில்லை.

சமீபத்தில் சென்னையில் நடந்த அழகிரி மகள் திருமணத்தில் கருணாநிதிமுன்னிலையில் ஜெயலலிதாவை கடுமையாக "அட்டாக் பண்ணினார். அவரது பேச்சுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், த.மா.கா. தலைமை அதை கண்டுகொள்ளமறுத்து விட்டது.

சிதம்பரம் பாதையில் ரங்கநாதனும் தலைமை மீதான அதிருப்தியில் இருக்கிறார்.இந்நிலையில் சிதம்பரம் பா.ஜ.க.வில் சேரப் போகிறார் என்று வதந்தி எழுந்துள்ளது.அதை சிதம்பரம் மறுத்துள்ள போதிலும் சிதம்பரத்தை வரவேற்கத் தயார் என்று பா.ஜ.கடெல்லி தலைவர்கள் அறிவித்து, வதந்தி தீக்கு எண்ணெய் ஊற்றினர்.

ஆனால், அதில் குளிர்காய விரும்பாத தமிழக பா.ஜ.க. தலைவர்கள், சிதம்பரம்சேர்வதையும், அதை டெல்லி தலைவர்கள் வரவேற்பதையும் கடுமையாகஆட்சேபித்திருந்தனர். அதோடு சிதம்பரத்தையும் விமர்சித்திருந்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்து ரங்கநாதன் வெள்ளிக் கிழமை பேட்டி அளித்தார். அவர்கூறுகையில், ""நாட்டின் உயர்ந்த பதவியான நிதியமைச்சர் பொறுப்பு வரை வகித்தவர்சிதம்பரம். அவர் வகிக்க வேண்டிய இன்னும் ஒரு பதவி இருக்கிறதென்றால், அதுவாஜ்பாய் வகிக்கும் பிரதமர் பதவி தான். எனவே பதவி கேட்டு அவர் பா.ஜ.க.விடம்அலைய வேண்டிய அவசியம் இல்லை.

பா.ஜ.க. ஒரு மதச்சார்புள்ள கட்சி. அதில் இணைவதை சிதம்பரம்

ஒரு நாளும் விரும்பமாட்டார். மேலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு ஆளே இல்லை.அந்த கட்சி நம்பியிருப்பது தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் தான். இந்த இருகட்சிகளும் காட்டிய கருணையில் தான் பா.ஜ.க. மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த லட்சணத்தில் சிதம்பரத்தை சேர விடமாட்டோம் என்று இல்லாத ஒன்றைஎதிர்ப்பது போல் பாவ்லா காட்டும் இல.கணேசனை கடுமையாக கண்டிக்கிறேன்.

த.மா.கா.வின் தனிப்பெரும் தலைவராக வலம் வரும் சிதம்பரத்திற்கு சொந்த வீட்டிற்குஇரண்டகம் செய்யும் எண்ணம் துளியும் இல்லை என்றார் ரங்கநாதன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X