நீச்சல்: பெண்களுக்கான 50 மீட்டர் பிரிவில் ஹாலந்து வீராங்கனை உலக சாதனை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
நீச்சல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் பிரிவில் ஹாலந்து வீராங்கனை டிபுருஜின் புதிய உலக சாதனையைப் படைத்தார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியின் அரையிறுதியில் அவர் பந்தையதூரத்தை 24.13 விநாடிகளில் நீந்திக் கடந்து உலக சாதனை படைத்தார். இதன் மூலம்இந்த ஆண்டு ஜுன் மாதம் தான் படைத்த 24.39 விநாடிகள் என்ற உலக சாதனையைஅவர் முறியடித்தார்.
ஏற்கெனவே இப் பிரிவில் தகுதிச் சுற்றில் 24.46 விநாடிகளில் பந்தைய தூரத்தை நீந்திக்கடந்து புதிய ஒலிம்பிக் சாதனையையும் அவர் படைத்தார்.
100 மீட்டர் பட்டர்பிளை மற்றும் பிரீஸ்டைல் பிரிவுகளிலும் இவர் உலகசாதனைகளைப் படைத்தார். இதையடுத்து இந்த சிட்னி ஒலிம்பிக்கில் இவர் 3 உலகசாதனைகளையும், ஒரு ஒலிம்பிக் சாதனையையும் படைத்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications