நீச்சல்: ஆண்கள் 50 மீ. நீச்சலில் இருவருக்குத் தங்கம்
சிட்னி:
நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் இருவருக்கு தங்கப் பதக்கங்கள்வழங்கப்பட்டன.
ஒலிம்பிக் வரலாற்றில் இவ்வாறு ஒரே போட்டியில் இரு தங்கப் பதக்கங்கள்வழங்கப்படுவது இது இரண்டாவது முறை. ஏற்கெனவே 1984, லாஸ் ஏஞ்சலீஸ்ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் இவ்வாறு இரு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற 50 மீட்டர் நீச்சல் போட்டியின் இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் காரிஹால், அந்தோணி எர்வின் இருவரும் பந்தைய தூரத்தை 21.98 விநாடிகளில் நீந்தினர்.
இதையடுத்து இருவருக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. ஹாலந்து நாட்டின் பீட்டர் வான் டென்ஹூகன்பாண்ட் 22.03 விநாடிகளில் வந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக 50 மீட்டர் நீச்சலில் தங்கம் வென்று சாதனைபடைக்கவேண்டும் என்ற ரஷ்யாவின் அலெக்சாண்டர் போபோவின் கனவை அமெரிக்க வீரர்கள்முறியடித்தனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் அலெக்சாண்டர் போபோவ் 22.24 விநாடிகளில் வந்து6-வது இடத்தையே பெற்றார்.
1992, 94-ம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர்நீச்சல் பிரிவுகளில் போபோவ் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த சிட்னி ஒலிம்பிக்கில் 50 மீட்டரில் எந்த பதக்கத்தையும் வெல்லத் தவறி அவர் 100மீட்டரில் வெள்ளிப் பதக்கத்தையே பெற முடிந்தது.![]()
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications