ஆண்கள் 20 கி.மீ. நடைப் போட்டி: ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார் மெக்ஸிகோ வீரர்
சிட்னி:
ஆண்களுக்கான 20 கிலோமீட்டர் நடைப் போட்டியில் மெக்ஸிகோ நாட்டின் பெர்னார்டோசெகுரா தங்கப் பதக்கம் வென்றார். இப் போட்டியில் அவர் புதிய ஒலிம்பிக் சாதனைபடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிட்னி ஒலிம்பிக்கில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அதலெடிக்ஸ் போட்டிகள்வெள்ளிக்கிழமை தொடங்கின. ஆண்களுக்கான 20 கி.மீ. நடைப் போட்டியில்தான் முதல்பதக்கம் வழங்கப்பட்டது. அப் போட்டியில் தங்கம் வென்று அப் பெருமையைப் பெற்றார்செகுரா.
அவர் பந்தைய தூரத்தை 1 மணி 18 நிமிடங்கள் 47 விநாடிகளில் நடந்து புதிய ஒலிம்பிக்சாதனையைப் படைத்தார். இதன் மூலம் 1988-ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக்கில் செக்குடியரசு நாட்டின் ஜோசப் பிரிபிலிநெக் படைத்திருந்த 1 மணி 19 நிமிடங்கள் 57விநாடிகள் என்ற சாதனையை அவர் முறியடித்தார்.
போலந்தின் ராபர்ட் கோர்ஸெனியோவ்ஸ்கி வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொருமெக்ஸிகோ வீரர் நோ ஹெர்னான்டஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.












Click it and Unblock the Notifications