அதலெடிக்ஸ்: 400 மீட்டர் ஓட்டம் - மைக்கேல் ஜான்சன், கதே பிரீமேனுக்குத் தங்கம்
சிட்னி:
அதலெடிக்ஸ் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் மைக்கேல்ஜான்சனும், பெண்கள் பிரிவில் கதே பிரீமேனும் தங்கப் பதக்கம் வென்றனர்.
திங்கள்கிழமை நடந்த இப் போட்டியில் ஆண்கள் பிரிவில் அமெரிக்காவின் மைக்கேல்ஜான்சன் பந்தைய தூரத்தை 43.84 விநாடிகளில் ஓடிக் கடந்து தங்கப் பதக்கம்வென்றார்.
இதன் மூலம் ஒலிம்பிக்கில் அவர் தனது மூன்றாவது தனிநபர் தங்கப் பதக்கத்தையும்ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் மொத்தம் 13-வது தங்கப்பதக்கத்தையும் வென்றார்.
அது தவிர, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தில்தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
அமெரிக்காவின் ஆல்வின் ஹாரிசன் வெள்ளிப் பதக்கத்தையும், ஜமைக்காவின் கிரிகரிஹாட்டன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
கதே பிரீமேனுக்குத் தங்கம்:
பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கதே பிரீமேன் தங்கப்பதக்கம் வென்றார்.
அவர் பந்தைய தூரத்தை 49.11 விநாடிகளில் ஓடிக் கடந்து தங்கம் வென்றார்.ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்பதக்கம் வெல்வது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அதலெடிக்ஸில் ஆஸ்திரேலியாவுக்குஇப்போதுதான் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
ஜமைக்காவின் லொரெய்ன் கிரஹாம் வெள்ளிப் பதக்கமும், இங்கிலாந்தின் காத்தரின்மெர்ரி வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications