டேபிள் டென்னிஸ்: எல்லா தங்கப்பதக்கமும் சீனாவுக்கே...
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
டேபிள் டென்னிஸ் போட்டியில் அனைத்து தங்கப் பதக்கங்களையும் வென்று சீனாசாதனை படைத்துள்ளது.
திங்கள்கிழமை நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் சீனாவின் கோங்லிங்குயி 21-16, 21-19, 17-21, 14-21, 12-13 என்ற செட் கணக்கில் ஸ்வீடனின்ஜான்-ஓவ் வால்ட்னரைத் தோற்கடித்து தங்கம் வென்றார்.
வால்ட்னர் வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு சீன வீரர் லியு குவோலியாங்வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இதன் மூலம் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர், இரட்டையர் மற்றும்பெண்கள் ஒற்றையர், இரட்டையர் என 4 பிரிவுகளிலும் சீனா தங்கம் வென்று மீண்டும்சாதனை படைத்துள்ளது.
ஏற்கெனவே 1996-ம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கிலும் டேபிள் டென்னிஸ்போட்டியில் அனைத்து தங்கங்களையும் சீனா வென்று சாதனை படைத்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications