For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களுக்காக ஆயுதப் போராட்டம் துவக்கியிருக்கிறேன்.... புதிய கேசட்டில் வீரப்பன் ஆவேசம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து தமிழ் தேசிய இயக்கம் அமைப்பின் தலைவர் ப. நெடுமாறனுக்கு ஒருஆடியோ கேசட் வந்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு இந்த கேசட் அவருக்கு வந்தது. இதில் மைசூர் சிறையில் உள்ள தடா கைதிகளைவிடுவிக்காவிட்டால், ராஜ்குமாரை கட்டாயம் விடுவிக்க மாட்டேன் என வீரப்பன் கூறியுள்ளார்.

கேசட்டில் உள்ள விவரங்கைள நெடுமாறனின் அலுவலகம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டது. அதில் வீரப்பன்கூறியிருப்பதாவது:

தடா கைதிகளும், தமிழ்த் தீவிரவாதிகளும் எந்தத் தவறும் செய்யாமல் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களைவிடுவிக்க நீதிமன்றத்தில் இரு மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் போராடி வருவதாகக் கூறுவதையும் ஏற்கமுடியாது.

இந்த தமிழ் தீவிரவாதிகளும், தடா கைதிகளும் அனாவசியமாக சிறையில் வாடியபோதும் பாதிக்கப்பட்டபோதும்இந்த சட்டமும், நீதியும் எங்கே போனது. எனது பொறுமைக்கு அளவு உண்டு. இந்தப் பிரச்சனை அமைதியாகத்தீர்வதும் இல்லை வேறுமாதிரியாவது இரு மாநில அரசுகளின் கையில் தான் உள்ளது.

இரு மாநிலங்களும் இதை நன்றாகப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. நானும், என்னுடன் உள்ள தமிழ்இயக்கவாதிகளும் பிடிவாதமாக இருப்பதாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது உண்மை தான். எங்களதுகொள்கைகளுக்காக உயிரை விடவும் தயாராக உள்ளோம்.

நாங்கள் 12 நிபந்தனைகளை வைத்தோம். ஆனால், இரு அரசுகளும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி இவற்றைநிராகரித்து வருகின்றன. எங்களது பொறுமைக்கு ஒரு அளவு உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடன் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் என்னைப் பிடிக்கவும் இரு மாநில அரசுகளும்முயல்கின்றன. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இரு மாநில அரசுகளின் இந்தச் செயலை ஏற்க முடியாது.

இந்தப் பிரச்சனையில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து இதனால் கர்நாடகத்தில் வாழும் லட்சக்கணக்கான தமிழர்கள்பாதிக்கப்பட்டால் அந்தப் பழியை என் மீது போட இரு மாநிலங்களும் முயல்கின்றன. தமிழர்களுக்கு பாதுகாப்புஅளிக்க வேண்டியது இரு மாநில அரசுகளின் கடமை. இதற்கு ராணுவத்தின் உதவியைக் கூட கோர வேண்டும்.

அரசு அடக்குமுறையை ஒழித்துக் கட்டி புதிய ஜனநாயக தமிழகத்தை உருவாக்க வேண்டும். எங்களின் ஆயுதப்போராட்டமும், நெடுமாறன் போன்றவர்களின் ஜனநாயகப் போராட்டமும் இணைந்தால் இது சாத்தியமாகும் என்றுநான் நம்புகிறேன்.

நான் பழைய வீரப்பன் இல்லை. தமிழ் இயக்கவாதிகளுடன் இணைந்து தமிழகத்தை விடுவிப்பது தான் எனதுநோக்கம். இதனால் தான் தமிழர்கள் நலனுக்காக போராட்டத்தைத் துவக்கியுள்ளேன.

ஐயா நெடுமாறன் குறித்து எனக்கு இந்த தமிழ் இயக்கவாதிகள் நிறையவே தகவல்கள் கூறினர். இலங்கைத்தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டு தமிழர்களின் நலனுக்காகவும் அவர் செய்துள்ள தியாகங்களை உலகமேஅறியும்.

எனது கோரிக்கைகளுக்காக நெடுமாறன் ஜனநாயகரீதியில் போராடுகிறார். நான் ஆயுதப் போராட்டம்நடத்துகிறேன். இந்தப் பிரச்சனைகள் எல்லாமே தமிழ்நாடு தேசிய விடுதலைப் படையின் ஆயுதப் போராட்டம்மூலம் மட்டுமே தீரும் என நம்புகிறேன். இந்தக் கடத்தல் கூட எனது ஆயுதப் போராட்டத்தின் துவக்கம் தான்.

1991ம் ஆண்டு காவிரிக் கலவரத்தின்போது ஆயிரக்கணக்காண கர்நாடக தமிழர்கள் கொலப்பட்டனர். அவர்களின்சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆனால், இவர்களுக்கு நஷ்டஈடு வழங்காமல் கர்நாடகம் உச்சபட்ச அலட்சியம்காட்டி வந்தது. தமிழக அரசியல்வாதிகளும் பதவியில் நிலைத்திருப்பதற்காக இந்தப் பிரச்சனை குறித்து பேசக் கூடஇல்லை.

கடந்த 8 ஆண்டுகளாக ஒரு 70 வயது மூதாட்டி உள்பட 51 தடா கைதிகள் மைசூர் சிறையில் கொடுமைக்குள்ளாகிவருகின்றனர். இவர்களின் விடுதலைக்காக பல்வேறு அமைப்புகள் போராடியபோதும் அதை கர்நாடக அரசுஅலட்சியப்படுத்தி, கேவலப்படுத்தி வந்தது. இப்போது ராஜ்குமாரை கடத்திய பிறகு தான் இறங்கி வந்து எதையும்செய்யத் தயார் என்று கூறுகின்றனர்.

கர்நாடகத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யத் தவறிய மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இப்போதுஅப்பாவித் தமிழர்களின் விடுதலையில் பிரச்சனை ஏற்படுத்தி வருகின்றன.

இந்திரா காந்தி கொலையை அடுத்து நடந்த வன்முறையில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். இந்தவன்முறைக்குக் காரணமாக அமைச்சர்கள் மட்டும் எப்படி விடுவிக்கப்பட்டனர்?

வழக்கறிஞர் ரஷீதைக் கொலை செய்த கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான ஜாலப்பா மட்டும்எப்படி விடுவிக்கப்பட்டார்?

ஜாதிக் கலவரங்களை தூண்டிவிட்டு அப்பாவி மக்களின் உயிர்களை பலி வாங்கி வரும் அரசியல்வாதிகள் மீது உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்தது?

காவிரிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட கர்நாடகத் தமிழர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக் கூறிய நடுவர் மன்றத்தின்தீர்ப்பை அமலாக்கச் சொல்லி கர்நாடக அரசை கட்டாயப்படுத்த நிலையில் உள்ளது நாட்டின் உச்ச நீதிமன்றம்.

அப்படி இருக்கையில் இந்தப் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கூறுவதில்என்ன தவறு இருக்கிறது.

இவ்வாறு ஆவேசமாக பேசியுள்ளார் வீரப்பன்.

இந்த கேசட்டில் காட்டிலிருந்து வெளியே வந்த நாகப்பா குறித்து எந்தத் தகவலும் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X