For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வாஜ்பாய் அரசு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தியாவில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நாளையுடன்(வெள்ளிக்கிழமை) இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

3வது முறையாக பிரதமரான வாஜ்பாய் இப்போது தான் முதல்முறையாக ஓராண்டு ஆட்சியில் இருந்துள்ளார். இருமுறை கூட்டணி ஆட்சி நடத்த முயன்று அவை அல்ப ஆயுசிலேயே கவிழ்ந்தன.

ஆனால், இம்முறை சுமார் 24 கட்சிகள் கொண்ட ஒரு பிரச்சனையான கூட்டணியை மிகத் திறமையாக கையாண்டுஆட்சியை நடத்திக் காட்டியிருக்கிறார் வாஜ்பாய். இதற்கு அவரது 50 ஆண்டு கால அரசியல் அனுபவமும்,நகைச்சுவை உணர்வும் மிகப் பெரிய அளவில் கை கொடுத்திருக்கின்றன.

அதிமுக போய் திமுக:

கூட்டணியில் இருந்த அதிமுக பிரச்சனையைக் கிளப்பி ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தபோது மிகச் சாதுரியமாகதிமுக, பா.ம.க. மதிமுகவை கூட்டணியில் இழுத்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டார் வாஜ்பாய். அத்வானியின்தீவிர இந்துத்துவம், ஆட்சி நடத்த உதவாது என்பதை உணர்ந்து கூட்டணிக் கட்சிகளின் உணர்வுகளுக்கும்மதிப்பளித்து பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு நிலையான ஆட்சியைத் தந்திருக்கிறார் வாஜ்பாய்.

கயிறு மேல் நடப்பது மாதிரி தான் இந்தக் கூட்டணி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் வாஜ்பாய்.

74 வயதான பிரதமர் இப்போது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மும்பை பிரீச் கேண்டிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது பலமான மூட்டுடன் மேலும் சிறப்பாகவே தனது கயிற்றுநடைப் பயணத்தை வாஜ்பாய் தொடர்வார் என்கிறார் அரசியல் பார்வையாளர் ஒருவர்.

இந்துத்துவக் கொள்கைகளை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதால் அயோத்தி,பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது போன்ற தனது தீவிர கொள்கைகளைஓரத்தில் வைத்துவிட்டு பல்வேறு மாநிலங்களில் பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்தது பாரதியஜனதா.

காங்கிரஸ் கூட்டணியை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆட்சியைப் பிடித்தது. எதிர்க் கட்சிகளில் நிலவும் குழப்பத்தால்தேசிய ஜனநாயக முன்னணிக்கு அவர்களால் எந்தப் பிரச்சனையும் கொடுக்க முடியவில்லை.

எதிர்க் கட்சிகளின் குழப்பம்:

கடந்த தேர்தலில் வெறும் 112 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியில் ஏகப்பட்ட பிரச்சனைகள். முக்கியதலைவர்கள் எல்லாம் கட்சியைவிட்டு வெளியேறிவிட்டதாலும் அரசியல் அனுபவம் இல்லாத சோனியா காந்திகட்சியை நடத்திச் செல்வதில் சிரமப்பட்டு வருகிறார்.

தனது கட்சியில் பிரச்சனைகளைத் தீர்க்கவே அவருக்கு நேரம் போதாததால் ஆளும் கட்சிக்கு அரசியல்ரீதியிலானஇடைஞ்சல்களை தர அவரால் முடியவில்லை. இது பா.ஜ.கவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.

அதே போல கம்யூனிஸ்ட் கட்சிகள் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடன் மோதலில் ஈடுபட்டுள்ளன.அவர்களாலும் தேசிய அரசியலில் கவனம் செலுத்த முடியவில்லை. மேற்கு வங்க சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையைபெரிதாக்கி கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஓரம் கட்டி வைத்திருக்கிறார் வாஜ்பாய்.

கூட்டணியில் இருந்து வெளியேறிய ஜெயலலிதாவிடம் எம்.பிக்கள் இருந்தும் ஏதும் செய்ய முடியாத நிலை.கோர்ட், கேஸ், சிறை என்று சொந்த பிரச்சனைகளில் சிக்கியுள்ளதால் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகஅறிக்கை விடக் கூட நேரமில்லாமல் இருக்கிறார்.

இவ்வாறு எதிர்க் கட்சிகளுக்கு உள்ள பிரச்சனைகள் வாஜ்பாய்க்கு சாதகமாக இருந்து வருகின்றன. இந்த நிலைமாறினால் பா.ஜ.கவுக்கு உண்மையான தலைவலி ஆரம்பமாகும்.

தலைவலி தந்த நண்பர்கள்:

அதே நேரத்தில் பா.ஜ.கவுக்கு பிரச்சனை தந்து வருவது அவர்களின் நண்பர்கள் தான். ஆர்.எஸ்.எஸ்., விஸ்வஹிந்து பரிஷத் ஆகியவை பல விஷயங்களில் வாஜ்பாயை எதிர்த்து வருகின்றன. பா.ஜ.கவின் மென்மையானஇந்துயிசம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. கிருஸ்தவ மதத்துக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரமாக்க ஆர்.எஸ்.எஸ்.முயற்சிப்பதை வாஜ்பாய் கட்டுப்படுத்திவிட்டார்.

அதே போல பொருளாதார தாரளமயமாக்கல் விஷயத்தில் காங்கிரஸ் பாதையிலேயே பா.ஜ.கவும் செல்வதைவிஷ்வ ஹிந்து பரிஷத் விரும்பவில்லை. இவர்களின் எதிர்ப்பை வாஜ்பாய் கண்டுகொள்ளாதது இவர்களுக்குகோபத்தைக் கொடுத்துள்ளது.

கடந்த ஆண்டில் வாஜ்பாய் சந்தித்த மிகப் பெரிய சவால் கார்கில் விவகாரம் தான். பாகிஸ்தானின் ஊடுருவலைக்கண்டுபிடிப்பதில் அரசு தோல்வியைத் தழுவினாலும் அடுத்து பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுப்பதில் பெரும்வெற்றி பெற்றது. ஆனாலும் வாஜ்பாய் ஆட்சிக்கு கார்கில் ஒரு மாறாத தழும்பு தான்.

அமெரிக்க உறவு, அணுகுண்டு:

அடுத்ததாக இரு வேறு கருத்துக்கள் இருந்தாலும் இந்தியா நடத்திய அணு குண்டு சோதனை வாஜ்பாயின்இமேஜை வலுப்படுத்தியது. அடுத்ததாக அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தியது வாஜ்பாய் அரசின் மிகப்பெரிய சாதனை. அமெரிக்க அதிபரை இந்தியா வரச் செய்தது, அமெரிக்காவுக்குப் போய் அந் நாட்டுநாடாளுமன்றத்தில் உரையாற்றியது, தீவிரவாத தடுப்பில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவைத் திரட்டியதுஎன இந்த விஷயத்தில் தொடர்ந்து சாதனைகளைப் புரிந்து காட்டியிருக்கிறார் வாஜ்பாய்.

அதே நேரத்தில் அணு ஆயுதப் பரவல் சட்டத்தில் அமெரிக்காவுக்கு அடி பணிந்துவிடாமல் இந்தியாவின்துணிவையும் எடுத்துக் காட்டியிருக்கிறார் வாஜ்பாய்.

வெளியே தெரியாவிட்டாலும் கூட்டணிக் கட்சிகள் கட்சிகள் தான் ஆட்சியில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.குஜாத்தில் ஆர்.எஸ்.எஸ்சில் அரசு ஊழியர்கள் சேரலாம் என அம் மாநில பா.ஜ.க. அரசு அறிவிக்க அதை மத்தியஅரசு சந்தோஷமாகவே அனுமதித்தது. ஆனால், கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அதை தீவிரமாக எதிர்க்கவேஅந்த அறிவிப்பை வாபஸ் பெறச் செய்தது மத்திய அரசு.

தலித்களுக்கு முக்கியத்துவம்:

வாஜ்பாயின் மற்றொரு சாதனை கட்சிக்கு ஒரு தாழ்த்தப்பட்டவரை தலைவராக்கிக் காட்டியது. உயர்ஜாதிஇந்துக்களுக்கான கட்சி என்ற இமேஜை உடைப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வரும் வாஜ்பாய், முஸ்லீம்கள்,பிற்படுத்தப்பட்டவர்களின் ஆதரவைப் பெற கட்சி பாடுபடும் என நாக்பூரில் நடந்த பா.ஜ.க. மாநாட்டில் தீர்மானம்நிறைவேற்றச் செய்தார்.

வாஜ்பாயின் நல்ல மனிதர் இமேஜ் தான் ஆட்சியை ஓராண்டு காலம் காப்பாற்றியிருக்கிறது என்கிறார் காங்கிரஸ்தலைவர்களில் ஒருவரான மார்க்ரெட் ஆல்வா. இந்த ஆட்சியில் விலைவாசி ஏறிவிட்டது, மதவாதம்பெருகிவிட்டது, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார்.

எது எப்படியோ மாதம் ஒரு பிரதமரை பார்த்துக் கொண்டிருந்த தேசத்துக்கு நிலையான ஆட்சியைக்கொடுத்திருக்கிறார் வாஜ்பாய்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X