ஜெர்மனியில் இந்திப் படங்களுக்கு பெருகும் ஆதரவு
பெர்லின்:
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகர தெருக்களில் ஷாருக் கானையும், மாதுரிதீக்ஷித்தையும், அஸ்வர்யா ராயையும் போஸ்டர்களில் பார்த்தால் ஆச்சரியப்படவேண்டாம். இதெல்லாம் இங்கு சகஜம்!.
பிராங்க்பர்ட் நகரின் கெய்சர்டிரேஸ் தெருவில் இந்திப் படங்களின் போஸ்டர்களும்,நடிக, நடிகையரின் போஸ்டர்களும் சகஜமாக காணப்படும். பிராங்க்பர்ட் நகரின்முக்கியப் பகுதியாகும் இது. இங்கு இந்தியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். எனவேஇந்திப் படங்களும் அதிகம் போடப்படுகிறது. இந்தியர்கள் மட்டுமல்லாது,ஜெர்மனியர்களும் இந்திப் படங்களை ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.
மத்திய ரயில் நிலையம் உள்ள ஹாப்தோன்ஹாப் பகுதியிலிருந்து சிறிது தூரத்தில்கெய்சர்டிரேஸ் தெரு உள்ளது. இந்திய, பாகிஸ்தானிய பலசரக்குக் கடைகள் இங்குபரவலாக காணப்படும்., ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள், வங்கதேசத்தவர்கள்,இலங்கை நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கடைகளுக்கு அடிக்கடி வருவர்.
இங்குள்ள தியேட்டர்களில் திரையிடப்படும் இந்திப் படங்களுக்கு அதிகம் வருவது,நிச்சயமாக இந்தியர்கள் அல்ல. பாகிஸ்தானியர்கள்தான் இந்திப் படங்களின் தீவிரரசிகர்கள். வாலி கான் என்பவர் கூறுகையில், பாகிஸ்தானில் இந்திப் படங்கள்பார்ப்பதை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். பரம்பரைப் பகையைஞாபகமூட்டுவார்கள். இங்கு அப்படி இல்லை. சுதந்திரமாக நாங்கள் பார்ப்பதையாரும் தடை செய்ய முடியாது என்றார்.
முன்பு போல இப்போது ஜெர்மானியர்கள் இல்லை. மிகவும் மாறி விட்டார்கள்.இந்தியர்களுடன் மிகவும் நெருங்கப் பழகி விட்டனர் ஜெர்மானியர்கள். சமீபத்தில்,பெர்லின் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், ஹம் தில் சுக்கே சனம் படம்போடப்பட்டது. ஜெர்மானியர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்றது.
படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி, ஹீரோயின் ஐஸ்வர்யா ராய் ஆகியோரைப்பற்றி எழுதாத ஜெர்மனி பத்திரிகைகள் இல்லை. ஜெர்மனி மக்களுக்கு இந்தப் படம்மிகவும் வித்தியாசமாக இருந்ததாக கூறுகிறார் ஜெர்மனி திரைப்பட விமர்சகர் டோரத்திவென்னர்.
அவர் கூறுகையில், ஜெர்மானியர்கள் இந்தப் படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தார்கள்.அவர்களுக்கு இது மிகவும் வித்தியாசமான படம். வன்முறை, செக்ஸ் காட்சிகள்நிறைந்த ஹாலிவுட் படங்களைப் பார்த்து வெறுத்துப் போயிருந்தஜெர்மானியர்களுக்கு இந்தப் படம் பெரிய நிம்மதியாக இருந்தது.
கலாச்சாரப் பின்னணியுடன் கூடிய ஒரு படத்தைப் பார்ப்பதும் ஜெர்மானியர்களுக்குமிகவும் சந்தோஷமாக இருந்தது என்றார் டோரத்தி.
டோரத்தி இந்திய சினிமா குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்திப் படவுலகின்ஸ்டன்ட் மாஸ்டராக இருந்த நாடியா என்பவர் குறித்தும் புத்தகம் எழுதியுள்ளார்.
ஜெர்மனியில் இந்தியப் படங்கள் அதிகம் வருவதில்லை என்ற புகார் உள்ளது.இங்கிலாந்து, அமெரிக்கா போல ஜெர்மனியில் இந்தியப் படங்கள் அதிகம்திரையிடுப்படுவதில்லை. இதை ஒரு குறையாகக் கூறுகின்றனர் ஜெர்மனி இந்தியர்கள்.
பிராங்க்பர்ட், கலோன், டுஸ்ஸல்டார்ப் ஆகிய நகரங்களில் இந்தியப் படங்கள்திரையிடப்படுகின்றன. ஆனால் டிக்கெட் விலை பயங்கரமாக இருக்கும். ஒருவருக்கு12 டாலர் வரை இருக்கும் குறைந்தபட்சம் இருக்கும்.
விடியோ, விசிடி மூலம் இந்திப் படங்களைப் பார்ப்பதும் ஜெர்மனியில் அதிகரித்துவருகிறது. இதற்கேற்ப வீடியோகடைகளும் அதிகரித்து வருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications