For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாதகமாக தீர்ப்பு வந்தால் இனிப்பு, எதிராக வந்தால் பஸ் எரிப்பா? என்னப்பா இது!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. கருணாநிதிதான் மீண்டும் முதல்வராகவரவேண்டும் என எம்.ஜி.ஆர். அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசுகூறியுள்ளார்.

அரசு விரைவு போக்குவரத்துக் கழக எம்.ஜி.ஆர். அண்ணா தொழிலாளர் யூனியன்துவக்க விழாவை சென்னை பல்லவன் சாலையில் துவக்கி வைத்து, தொழிற்சங்கக்கொடியையும் ஏற்றி வைத்து, எம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர்திருநாவுக்கரசு எம்.பி. பேசியதாவது:

நரசிம்ம ராவ், பூட்டாசிங்குக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்ததைஎதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் எவரும் போராடவில்லை. ஆனால் ஜெயலலிதாவுக்குசாதகமாக தீர்ப்பு வந்தால் இனிப்பு வழங்குவது எதிராக தீர்ப்பு வந்தால் பேருந்துகளைகொளுத்துவது, மாணவிகளை உயிரோடு எரிப்பது போன்ற வன்முறைச்சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இரண்டாண்டுக்கு மேல் ஒருவருக்கு தண்டனைஅளிக்கப்பட்டால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. ஜெயலலிதாவுக்குமூன்றாண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து அப்பீல் செய்தாலும் தேர்தலில் போட்டியிட முடியாது. இது சட்டம்.இதைத்தான் முன்னாள் தேர்தல் கமிஷனர் சேஷனும், தற்போதைய தேர்தல் கமிஷனர்எம்.எஸ்.கில்லும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பி.எச் பாண்டியன், தா.பாண்டியன், வீரமணி போன்றோர் மூலம், ஜெயலலிதாதான் தேர்தலில் போட்டியிட முடியும் என பிரச்சாரம் செய்து வருகிறார்.

உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தால் தீர்ப்பு வருவதற்கு இரண்டு ஆண்டு, அதன் பின்ஜெயில் தண்டனை மூன்று ஆண்டும், விடுதலை ஆன பின் ஆறு ஆண்டுமாகமொத்தமாக பதினொரு ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.

இதை அ.தி.மு.க. தொண்டர்கள் தேர்தல் சமயத்தில் உணர்ந்து கொள்வார்கள்.அ.தி.மு.க.வில் இரண்டு சதவீதம் பேரே ஜெயலலிதாவுக்காக கட்சியில் இருக்கிறார்கள்.மற்றவர்கள் எம்.ஜி.ஆருக்காகவும், சின்னத்திற்காகவும் கட்சியில் இருப்பவர்கள்.

நான் கூட்டத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான அ.தி.மு.க.வினர்எங்கள் கட்சியில் இணைகின்றனர்.

தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்தது சரியா என கேட்கிறார்கள். ஜெயலலிாதவோடுஒப்பிடும் போது கருணாநிதி ஆயிரம் மடங்கு மேல். நான்கரை ஆண்டாக கருணாநிதிநல்லாட்சி நடத்தி வருகிறார். அதனால் அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவதே சிறந்தது.

எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. ஆளும் கட்சிக்கு தோழமை கட்சி. தொழிலாளர் நலனில்அக்கறை கொண்ட கட்சி என்று திருநாவுக்கரசு பேசினார்.

ஜெயா, சசி....ஜெயில்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X