For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிராமங்களுக்கும் இண்டர்நெட்...

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

இண்டர்நெட் புரட்சியின் பலனை கிராமங்களும் அனுபவிக்க வேண்டும் என்று கலத்தில் இறஙகியிருக்கிறார்சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் மாணவர் ஆனந்த் பாபு. இவருக்கு துணைநிற்கிறார் அமெரிக்காவைச் சேரந்த மார்க் சுக்சுமித்.

நெட்4ரூரல் புராஜெக்ட் என்ற திட்டத்தை அமலாக்குவதில் தீவிரமாக உள்ள பாபுவுக்கு வயது 24. இவரது நண்பர்மார்க் 29 வயதானவர்.

தொழில்நுட்பத்தின் பலனை அனுபவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. இண்டர்நெட் மூலம் கல்வியையும்விழிப்புணர்வையும் இந்திய கிராமங்களில் பரவச் செய்வது தான் இதன நோக்க எனகின்றனர். இதன் மூலம் கிராமமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவது தான் எங்கள் திட்டம் என்கின்றனர்.

அமெரிக்காவில் கைநிறைய பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த மார்க் அதை விட்டுவிட்டு இந்தியாவந்திறங்கியிருக்கிறார். உலகின் அனைத்து பிற்பட்ட பகுதிகளையும் இண்டர்நெட் மூலமாக இணைத்து அவற்றின்தரத்தை உயர்த்துவது என்ற உயர்ந்த குறிக்கோளும் கொண்டிருக்கிறார்.

டச் ஸ்கீரின் எனப்படும் தொட்டாலே செயல்படும் கம்ப்யூட்டர்களை இவர்கள் உபயோகிக்க திட்டமிட்டுள்ளனர்.கல்வி அறிவில்லாத ஊரகப் பகுதி மக்களை இதன் மூலம் எளிதில் பயிற்றுவிக்க இயலும் என இவர்கள்கருதுகின்றனர்.

இந்த கம்ப்யூட்டர்கள் அனைத்து மொழி ஈ-மெயில்களையும் கொண்டிருக்கும். தவிரவும் வாய்ஸ் மெயில் வசதியைஉபயோகிக்க திட்டமிட்டுள்ளனர்.

இவர்களின் ஆர்வத்தைப் பார்த்த சண்டிகர் மாநில ஐ.டி. இயக்குனர் உடனடியாக ஒரு மாடல் திட்டத்தை தயார்செய்யுமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து முதல்கட்டமாக தங்களது திட்டத்தை சண்டிகரில் செயல்படுத்தஉள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X