For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெடுமாறன் என்றொரு "மாஸ்டர் மைண்ட்"

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

தான் வெறும் எல்.டி.டி.ஈ. ஆதரவாளர் மட்டுமல்ல, எடுத்த காரியத்தை மிக ரகசியமாக நிறைவேற்றி முடிப்பதிலும்புலிகளுக்கு தான் சளைத்தவர் இல்லை என்பதையும் நிரூபித்துள்ளார் நெடுமாறன்.

முதல் முறையாக காட்டுக்குள் சென்றவர் வீரப்பனையும் அவனது கூட்டாளிகளையும் "படித்துவிட்டு" வந்தார்.அடுத்து அவர்களை எப்படி கையாள்வது என்பதை திட்டமிட்டார். தான் என்ன செய்யப் போகிறார் என்பதைப்பற்றி யாரிடமும் மூச்சுவிடவில்லை.

காட்டுக்கு சென்று வந்தது, மலையேறியது, பாம்பு விரட்டியது, யானை பார்த்தது போன்ற மயிர்க் கூச்செரியும்அனுபவங்களையெல்லாம் நிருபர்களை அழைத்து விளக்கி தனக்கு எந்த விளம்பரமும் தேடிக் கொள்ளவில்லை.இது ஒரு மனிதாபிமான முயற்சி என்று மட்டும் கூறிவிட்டு தனது அடுத்த கட்ட காட்டுப் பயணத்துக்குத்தயாரானார்.

மீண்டும் காட்டுக்குச் செல்லும் முன் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாமே மிக ரகசியமானவை.தன்னுடன் மனித உரிமை ஆர்வலர்களான புதுவை சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோர் தான் மீண்டும்காட்டுக்குள் வருகின்றனர் என்று கூறியிருந்தார் நெடுமாறன். இதை எல்லோரும் நம்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால், அதற்கு முன் தன்னுடைய நெருங்கிய நண்பரும் கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த தமிழர் தலைவர்களில்ஒருவரும், கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான ப. சண்முகசுந்தரத்துடன் ஆலோசனைநடத்தினார். கன்னடர்-தமிழர் ஒற்றுமையில் எப்போதுமே தீவிர ஆர்வம் காட்டி வருபவர் சண்முகசுந்தரம். அதேநேரத்தில் தமிழர்களின் நலனுக்கு பிரச்சனை வரும்போதெல்லாம் வெறும் கண்டனக் குரல் கொடுப்பதோடுநிறுத்திக் கொள்ளாமல், செயலிலும் இறங்குபவர்.

தீவிரமான தமிழ் பற்றாளர். இவர் மீது கன்னட தீவிரவாதிகளுக்கு பயம் உண்டு. பிற கன்னட ஆர்வலர்களுக்குஇவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. நியாயமாக எந்தப் பிரச்சனையையும் அணுகும் தன்னை கொண்டவர்.அனைத்துக் கட்சி அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் மட்டம் வரை அனைத்துத் தரப்பிலும் மரியாதையுடன்நடத்தப்படுபவர்.

ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தால் கர்நாடக தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை வீரப்பனிடம் விளக்கஇவரை விடச் சிறந்த யாரும் இருக்க முடியாது என்பதால் இவரையும் தன்னுடன் காட்டுக்குள் அழைத்துச் செல்லமுடிவெடுத்தார் நெடுமாறன்.

அதே போல முன்னாள் கர்நாடக டி.ஜி.பியான ராமலிங்கத்தின் மகன் ராம்குமாரையும் உடன் அழைத்துச் செல்லமுடிவு செய்தார். இவர் தமிழர் என்பது பிளஸ் பாயிண்ட். வீரப்பனின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசுக்குஉள்ள சட்டச் சிக்கல்கள் குறித்து வீரப்பனுக்கு விளக்க இந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் மகன் மிகவும்உதவுவார் என்று நம்பினார் நெடுமாறன்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒரு டாக்டரை உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தார். அந்த டாக்டர்பெண்ணாய் இருக்க வேண்டும் என திட்டமிட்டு பெங்களூரில் தன்னார்வ அமைப்பில் உறுப்பினராக உள்ளபானுவைத் தொடர்பு கொண்டனர். அவர் காட்டுக்குள் வரத் தயார் என அறிவித்தார்.

இத்தனை ஏற்பாடுகளையும் யாருக்கும் தெரியாமல் கணகச்சிதமாகச் செய்து முடித்திருந்தார் நெடுமாறன்.வீரப்பனிடமிருந்து சிக்னல் வந்தவுடன் இவர்கள் மூவர் மற்றும் பேராசிரியர் கல்யாணி, சுகுமாறனுடன் காட்டுக்குள்செல்லத் தயார் நிலையில் இருந்தார் நெடுமாறன்.

இந்த நிலையில் தான் எல்.டி.டி.ஈ. ஆதரவாளரை தூதுவராக பயன்படுத்துவதா என்று சோனியா முதல் தமிழ் மாநிலகாங்கிரஸ் வரை அனைவரும் பிரச்சனை கிளப்பினர். கர்நாடக முதல்வர் குழம்பினார். நெடுமாறனுடனானசந்திப்பைக் கூட தவிர்த்தார்.

இந்த நேரத்தில் சட்டசபை கூடியது. தமிழ் மாநில காங்கிரசுக்கு அரசியல் செய்ய வேண்டிய நிர்பந்தம். இந்தப்பிரச்சனையில் தமிழக அரசைக் கடிந்து கொண்ட அக் கட்சி அ.தி.மு.கவோடு சேர்ந்து நெடுமாறனையும்கடுமையாக விமர்சிக்க வெறுத்துப் போனார் நெடுமாறன். தமிழ் மாநில காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சோ.பாலகிருஷ்ணனை வேண்டுமானால் காட்டுக்குப் போகச் சொல்லுங்கள் என்று பரிந்துரைத்துவிட்டு, இனி நான்காட்டுக்குள் செல்ல மாட்டேன் என்று அறிவித்தார்.

நிலைமை விபரீதம் ஆனதால் தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, ராஜ்குமார் குடும்பம்,ரஜினி, கன்னட நடிகர்கள் , ராமதாஸ் என அனைவரும் பலமுறை வேண்டுகோள் வைத்த பின்னர் தான் இறங்கிவந்தார் நெடுமாறன்.

வீரப்பனிடமிருந்து சிக்னல் வர கோபால் தனியாக காட்டுக்குச் செல்வார், நாங்கள் தனியே காட்டுக்குச் செல்கிறோம்என அறிவித்துவிட்டு கடந்த 11ம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டார் நெடுமாறன். அவருடன் கல்யாணியும்,சுகுமாறனும் தான் சென்றிருப்பதாக அனைவரும், ராஜ்குமார் குடும்பம் உள்பட, நினைத்திருக்க பெரும் படையுடன்அவர் காட்டுக்குள் சென்றிருந்தார்.

அதே நேரம் நெடுமாறனைத் தொடர்ந்து காட்டுக்குப் புறப்பட்ட கோபாலுக்கு வீரப்பனிடமிருந்து எந்த சிக்னலும்வரவில்லை. அவர் காட்டு எல்லையிலேயே நின்றிருந்தார். ஆனால், நெடுமாறன் அணிக்கு வீரப்பனின் சிக்னல்கிடைக்க காட்டில் நுழைந்தது.

சுமார் 2 நாட்கள் வீரப்பனுடன் ஒரு பட்டிமன்றமே நடத்தி, டாக்டர் பானுவின் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திராஜ்குமாரை மீட்டு வந்திருக்கிறார்கள் நெடுமாறனும் இந்த அணியினரும்.

கோபால் வருவதை ஆரம்பத்தில் இருந்தே வீரப்பன், குறிப்பாக வீரப்பனுடன் இருக்கும் தமிழ் தேசியப் படைதீவிரவாதிகள், விரும்பவில்லை என்று தெரிகிறது. ஆனால், தமிழக அரசு அவரே தூதுவர் என்பதில் கெடுபிடியாய்இருக்க 3 முறை அவரை கேஸட் கொடுத்து திருப்பி அனுப்பினான் வீரப்பன்.

4வது முறை சென்றபோது நெடுமாறன், கல்யாணி, சுகுமாறன் வந்தாக வேண்டும் என நிபந்தனை விதித்தான். வேறுஇல்லாததால் அதை இரு மாநில அரகளும் இதை ஏற்றுக் கொண்டன.

கடைசிப் பயணத்தில் நெடுமாறனை மட்டும் காட்டுக்குள் வரச் சொன்ன வீரப்பன், கோபாலைகண்டுகொள்ளாமலேயே விட்டுவிட்டான். ஆனால், ராஜ்குமார் கடத்தப்பட்ட உடனேயே கோபால் உடனடியாககாட்டுக்குள் சென்றதால் தான் கர்நாடகத்தில் பெரும் அளவிலான பதற்றம் தணிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு முறையும் ராஜ்குமாருடன் பேசிவிட்டு, அவருக்குத் தேவையான மருந்து மாத்திரைகளைக்கொடுத்துவிட்டுத் தான் திரும்பி வந்தார் கோபால். இது கோபாலுக்குக் கிடைத்த தோல்வியல்ல. தனக்குக்கொடுக்கப்பட்ட பணியை அவர் மிகச் சிறப்பாகவே செய்து முடித்தார். அவருடன் இந்த முறை வீரப்பன்ஒத்துழைக்காததற்கு தமிழ் தீவிரவாதிகளே காரணம்.

ஆனால், இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில், ஒரு பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டுகாடு, மலைகளில் நுழைந்து திரிந்து வெற்றியோடு திரும்பியிருக்கிறார் நெடுமாறன்.

அவரது வெற்றிக்கு முக்கியக் காரணம் அவர் மேற்கொண்ட ரகசியத் திட்டமும் அதை நிறைவேற்றிய விதமும்தான். இது தவிர நெடுமாறனின் உண்மையான தமிழ் பற்றும் அவர் மீது தீவிரவாதிகளுக்கு உள்ள மரியாதையும்அவரது சிரமத்தைக் குறைத்தன. நெடுமாறன் குறித்து தமிழ் தீவிரவாதிகள் மூலம் தெரிந்து கொண்ட வீரப்பனும்அவரை மிக மரியாதையோடு நடத்தி அனுப்பியுள்ளான்.

அதே நேரத்தில் காட்டுக்குள் உள்ள தீவிரவாதிகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும்நெடுமாறன் கூறியுள்ளார். என்னை வரச் சொன்னார்கள், அரசுகளும் கேட்டுக் கொண்டன. மனிதாபிமானஅடிப்படையிலும், கர்நாடகத்தில் வாழும் 40 லட்சம் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் தான் காட்டுக்குள்சென்றேன். இது தவிர இதில் வேறு ரகசியமோ, திட்டங்களோ கிடையாது என்று கூறியுள்ளார் நெடுமாறன்.

ராஜ்குமாரை மீட்ட பின்னர் அவருடன் பெங்களூர் வந்த நெடுமாறன் விதான செளதாவில் சிறிது நேரமேகாணப்பட்டார். நிருபர்களுக்கு பேட்டி கொடுப்பது, பிளாஷ் மழையில் நனைவது, டிவியில் முகம் காட்டுவதுஎன்றெல்லாம் எதையும் செய்யாமல், வழக்கம்போல் தனது எளிமையை வெளிப்படுத்தினார் வீரப்பனை ஜெயித்தஇந்த வெற்றியாளர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X