For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயிரைப் பொருட்படுத்தாது காடு சென்ற நெடுமாறன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Verappan Hounouring Rajkumar
ராஜ்குமாருக்குப் பொன்னாடை
போர்த்தும் வீரப்பன்
இதய அறுவைச் சிகிச்சை செய்த நிலையில், எனது உயிரையும் பொருட்படுத்தாது, ராஜ்குமாரை மீட்க காட்டுக்குச் சென்றேன் என்று ராஜ்குமாரைவெற்றிகரமாக மீட்டு வந்துள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

நடிகர் ராஜ்குமாரை மீட்டு வந்த தூதர் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் தனது வீட்டில் "தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில்கூறியிருப்பதாவது:

நடிகர் ராஜ்குமார் மீட்பு விவகாரம் எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி அல்ல. கர்நாடகத்தில் 40 லட்சத்துக்கும் மேல் தமிழர்கள்வாழ்கிறார்கள். தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் மேல் கன்னடர்கள் வாழ்கிறார்கள். நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரம் இந்த அமைதியானஉறவை, சீர்குலைத்து விடுமோ என்று எல்லோர் மனதிலும் குடிகொண்டிருந்த அச்சம் தற்போது நீங்கி விட்டது.

ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டு விட்டதால் தமிழர்கள், கன்னடர்கள் உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டு விட்டது. இந்த முறைகாட்டுக்குச் சென்ற போது, வீரப்பன் கோரியுள்ள நிபந்தனைகளை நிறைவேற்ற அனைத்து வகையான முயற்சிகளையும் மேற் கொள்ளுவோம் என்றஉறுதிமொழியை அளித்து விட்டுத்தான், ராஜ்குமாரை மீட்டு வந்தோம்.

நடிகர் ராஜ்குமாரையும், அவருடன் கடத்தப்பட்டவர்களையும் வீரப்பன் காட்டில் மிக நல்ல விதமாக நடத்தினார். காட்டில் என்ன வசதி செய்து தர முடியுமோ,அந்த வசதிகளை அவர்களுக்குச் செய்து கொடுத்தார்.

தனது தேவையைக் குறைத்துக் கொண்டு, ராஜ்குமாரை நன்கு நடத்தினார். ராஜ்குமாரை விடுவிக்கும்போது அவருக்குப் பொன்னாடை அணிவித்தார்வீரப்பன். புதிய ஆடைகளைக் கொடுத்து அணிந்து கொள்ள வற்புறுத்தினார். ராஜ்குமாரும் அதை ஏற்றுக் கொண்டார்.

Verappan With Rajkumar and Other Emissaries
தூதுக்குழுவினர், ராஜ்குமாருடன்,
வீரப்பன் எடுத்துக் கொண்ட
குரூப் போட்டோ
வீரப்பனின் எல்லா கோரிக்கைகளையும் ஒரு வகையான கடத்தல் மூலம் நிறைவேற்ற முடியாது என்பதை வீரப்பனுக்கு உணர்த்தினோம். மக்கள்மத்தியில் அவரது கோரிக்கைகள் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறித்து விவரித்தோம்.

வீரப்பனைச் சந்தித்து, நடிகர் ராஜ்குமாரை மீட்டது மனிதநேய அடிப்படையில்தான். பொய்யான வழக்கில் சிறை பட்டுக் கிடக்கும் அப்பாவி மக்களுக்குவிடுதலை கிடைக்கும் முயற்சியில் சட்ட ரீதியாக மேற் கொள்ளப்பட வேண்டும். இதே போல் எங்களது மனித நேயப் பணி தொடரும்.

எங்களுடன் டாக்டர் பானுவும் சிகிச்சை அளிப்பதற்காக வந்தார். ராஜ்குமாரை மீட்பதற்காக அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என்று குளத்தூர் மணிகூறியதால் அவரையும் தூதராக அழைத்துச் சென்றோம்.

நடிகர் ராஜ்குமாரை மீட்டு வந்து விட்டதால் இரு மாநில அரசுகளின் நல்ல உறவுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டது. எனது பணியை முதல்வர்கருணாநிதி பாராட்டியுள்ளார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதிமுக வும் தமாகா வும் என்னை விமர்சிக்கிறது. வசவர்கள்வாழ்க.

நான் சமீபத்தில் தான் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். மாடிப்படிகளில் ஏறக் கூடாது என்று டாக்டர்கள் தடை விதித்துள்ளனர். ஆனாலும்ராஜ்குமார் மற்றும் அவருடன் உள்ளவர்களின் உயிர்கள் என்னுடைய உயிரை விட முக்கியமானது. எனவே மனிதநேயப்பணி முக்கியமானது என்பதால்மலைகளில் ஏறிச் சென்று வீரப்பனைச் சந்தித்துப் பேசினேன்.

முதல் முறையாக வீரப்பனை சந்தித்தபோது வீரப்பன் இத்தனை வெகுளியாக சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவனாக, மனிதநேய உணர்வுகளை மதிப்பவனாகஇருப்பதைக் கண்டு நான் வியந்து போனேன்.

நியாயமான காரணங்களை எடுத்துக் கூறும்போது, அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் எல்லாருக்கும் வராது. ஆனால் அந்தப் பக்குவம்தவறை திருத்திக் கொள்ளக் கூடிய உணர்வு நிறையவே வீரப்பனிடம் உள்ளது என்றார் பழ.நெடுமாறன்.

உற்சாகமாக வரவேற்கப்பட்ட நெடுமாறன்:

இதற்கிடையே, ராஜ்குமாரை மீட்ட, பழ.நெடுமாறனுக்கு சென்னை கத்திப்பாரா சந்திப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை கத்திப்பாரா சந்திப்பில் தமிழர் தேசிய இயக்கம், தமிழ் தேச பொதுவுடைமை கட்சி, சான்றோர் பேரவை, தமிழர் இயக்கம் சார்பில் அவர்களுக்குவரவேற்பு அளிக்கப்பட்டது.

நெடுமாறனுடன் பேராசிரியர் கல்யாணி, சுகுமாறன், குளத்தூர் மணி, வக்கீல்கள் சந்திரசேகர், கோபிநாத் ஆகியோர் வந்தனர். வரவேற்பு முடிந்ததும்நெடுமாறன் நரசிம்மபுரத்திலுள்ள தனது வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரை உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X