For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

62 கோடி வாக்காளர்கள், 80 லட்சம் ஓட்டுச் சாவடிகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மக்களவை சபாநாயகர் பதவிக் காலத்தை 10 ஆண்டாக உயர்த்த வேண்டும். பதவி முடிந்ததும் சபாநாயகர் அரசியலை விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்றுஇந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் எம்.எஸ்.கில் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் எம்.எஸ்.கில்லுக்கு டி.லிட் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் கில்பேசியதாவது:

நாட்டில் உள்ள 100 கோடி மக்கள் தொகையில் 62 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 80 லட்சம் ஓட்டுச் சாவடிகளைபயன்படுத்துகிறோம். 50 லட்சம் தேர்தல் அலுவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

சி.டியில் பதிவு:

கடவுளின் கருணையாலும், அரசு இயந்திரத்தின் உதவியாலும் இத்தகைய சாதனையை நிகழ்த்தி வருகிறோம். தேர்தல் சீர்திருத்தத்திற்காக தேர்தல் கமிஷன்பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வாக்காளர் பட்டியல்களை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் வகையில் பட்டியலின் விவரங்கள் தொகுதி வாரியாக "சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.அரசியல் கட்சிகளும், வாக்காளர்களும் இதை வாங்கிப் பார்க்க முடியும்.

தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் முழுமையாக மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்த முயற்சிஎடுத்து வருகிறோம்.

புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்க முயற்சி எடுத்துள்ளோம். 1500 வாக்கு எண்ணும் மையங்கள்கணினிமயமாக்கப்பட்டுள்ளன. 1998ம் ஆண்டு முதல் 30 ஆயிரம் பக்கங்கள் கொண்ட "வெப் தளம் ஒன்றை தனியாக துவங்கி நடத்தி வருகிறோம்.

கனடா நாட்டு தேர்தல் கமிஷன் அந்த நாட்டின் ஒவ்வொரு தெருக்களையும் வரைபடமாக வெப் தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த முயற்சியை இந்தியாவிலும்மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

வெடிகுண்டுகள்:

பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலின் போது மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு கேட்பது வாடிக்கையாகி விட்டது. எல்லா மாநிலங்களுக்கும் மத்தியபோலீஸ் படையை அனுப்ப இயலாது. அரசியல் கட்சிகள் தங்களுக்குள் ஒரு லட்சுமன கோட்டை கிழித்துக் கொண்டு நியாயமான தேர்தல் நடத்த உதவவேண்டும்.

பல இடங்களில் தேர்தல் நெருங்க நெருங்க நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகரிப்பதாக செய்திகள் வருகின்றன. வட மாநிலங்களில் இருந்து வந்தஇந்த நிலை இப்போது தென் மாநிலங்களிலும் பரவி வருவது வருத்தமளிக்கிறது.

குற்றவாளிகள் அரசியலில் நுழைவதை தடுக்க வேண்டும். அதற்கு ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8வது பிரிவு திருத்தப்பட வேண்டும் என்றுநாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

வீண் சண்டை வீரர்கள்:

சட்டத்தை இயற்ற வேண்டிய ந ாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணான சண்டையில் கழிக்கின்றனர். அமெரிக்கா, கனடா போன்றநாடுகளில் நாடாளுமன்ற நிகழ்ச்சிக்கு யாரும் இடையூறு செய்வதில்லை.

அதற்கு சபாநாயகரும் அனுமதிப்பதில்லை. நாடாளுமன்றம் அமைதியான முறையில் நடைபெற சபாநாயகர் முக்கியமானவர் என்பதால், சபாநாயகர்பதவிக்குரியவர் ஆளும் கட்சியாலும், எதிர்க் கட்சியாலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட வேண்டும். குறைந்தபட்சம் 75 சதவீத உறுப்பினர்களின்ஆதரவையாவது அவர் பெற்றிருக்க வேண்டும்.

அவரது பதவி 10 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். அதன் பின்னர் அவர் பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றார் கில்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X