For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சியாச்சினில் 16 ஆண்டுகளில் 392 வீரர்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

சியாச்சின் பனி மலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்களில்1984-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை இதுவரை 392 பேர்இறந்துள்ளனர் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்கூறியுள்ளார்.

நாடாளுமன்ற ராஜ்யசபையில் பாதுகாப்புத் துறை தொடர்பாக கேட்கப்பட்டகேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

1984-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை 392 இந்தியவீரர்கள் உயிரிழந்துள்ளனர். சியாச்சின் மலைச் சிகரத்தில் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ள இந்திய வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறப்பு உடைகள், போதுமான கலோரிச் சத்துக்கள் நிறைந்த உணவு, போதுமானஅளவிலான விட்டமின் மாத்திரைகள் மற்றும் பனிக் காற்றை சமாளிக்கும் வகையிலானஇருப்பிடங்கள் ஆகியவை வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

5 ஹெலிகாப்டர்களை இழந்தோம்:

கடந்த ஒரு ஆண்டில் இந்திய விமானப்படை ஐந்து ஹெலிகாப்டர்களை விபத்தில்இழந்துள்ளது. இதுதவிர, 4 பைலட்டுகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

1999-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதிவரையிலான காலகட்டத்தில் இவை நிகழ்ந்துள்ளன. விமானப்படையின் மேற்குப்பிராந்தியத்தில் இந்த விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.

ஐந்து விபத்துக்களில் 3 விபத்துக்கள் மனிதத் தவறு காரணமாகவும், 2 விபத்துக்கள்தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் நிகழ்ந்துள்ளன.

புதிய மிராஜ் விமானங்கள்:

பிரான்ஸ் நாட்டிடமிருந்து மிராஜ்-2000 ரக போர் விமானங்களை இந்தியாவாங்குகிறது. இந்த விமானங்கள் 1982-ம் ஆண்டு ரகம்தான். ஆனாலும் கூட பழையவிமானங்கள் அல்ல.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகள்:

இந்தியாவால் 5000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக் கூடிய கண்டம் விட்டுக் கண்டம்பாயும் ஏவுகனைகளைத் தயாரிக்க முடியும். அதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளது.

இருப்பினும் தற்போது அதற்கான தேவை எழவில்லை என்பதால் இந்த வகைஏவுகனைத் தயாரிப்பை இந்தியா மேற்கொள்ளும் திட்டம் இல்லை என்று பதிலளித்தார்பெர்னாண்டஸ்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X