டாக்டர்கள் ஸ்டிரைக் .. சிகிச்சையின்றி ஒருவர் சாவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை:

பயிற்சி டாக்டரைத் தாக்கிய முன்னாள் எம்.எல்.ஏ.,வைக் கைது செய்யக் கோரிகோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால்சிகிச்சை தர முடியாமல் ஒரு நோயாளி இறந்ததையடுத்து பொதுமக்கள் புதன்கிழமைதிடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்கிழமை தொண்டாமுத்தூரைச் சேர்ந்தநாகராஜன் என்பவர் பாட்டில் குத்துப்பட்டு சிகிச்சைக்கு வந்துள்ளார். அவரைகாத்திருக்குமாறு அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் கூறியுள்ளனர்.

அப்போது நாகராஜனின் உறவினர் என்ற முறையில் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏசெல்வராஜ் அங்கு வந்துள்ளார். நாகராஜன் அவரிடம் தனக்கு சிகிச்சை அளிக்கடாக்டர்கள் கால தாமதம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து செல்வராஜ், அங்கு பணியில் இருந்த பயிற்சி டாக்டரிடம்விசாரித்துள்ளார். செல்வராஜூக்கும் அந்த பயிற்சி டாக்டருக்கும் இதனால் தகராறுஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பயிற்சி டாக்டரை செல்வராஜ் அடித்ததாகக்கூறப்படுகிறது.

இந்த பிரச்னை குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த பிரச்னைக்கு பின்னர் டாக்டர்கள் ஒன்று கூடி ஆலோசனை செய்து நள்ளிரவு முதல்திடீர் ஸ்டிரைக் கில் ஈடுபட்டனர்.பயிற்சி டாக்டரைத் தாக்கிய செல்வராஜை கைதுசெய்ய வேண்டும் எனக் கோரினர்.

டாக்டர்கள் திடீரென நள்ளிரவு முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் நோயாளிகள் கடும்அவதிக்குள்ளாயினர். இதில் சிவானந்தா காலனியைச் சேர்ந்த ஒரு நோயாளி,டாக்டர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் உரிய சிகிச்சையின்றி தவித்தார்.

முருகேசன் என்ற அவர், புதன்கிழமை காலையில் இறந்து போனார். முருகேசன்இறந்ததையடுத்து அவரது உறவினர்கள் மருத்துவமனையில் கூடினர். முருகேசனதுஉடலைப் பெற மறுத்தனர்.

டாக்டர்களின் கவனக்குறைவால் தான் முருகேசன் இறந்து போனார் எனக் கூறி திடீர்மறியலில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனைக்கு முன்பு நடந்த இந்த திடீர் மறியல்குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சந்தானம் அங்கு வந்து பேச்சுவார்த்தைநடத்தினார். திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட டாக்டர்களிடமும் பேச்சுவார்த்தைநடத்தினார்.

மாவட்ட நிர்வாகம் சார்பில், தீவிர சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகள்செய்யப்பட்டன. பல நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட ஒருபெண்ணுக்கு ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது. அதே ஆட்டோவிலேயே அவர்தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

டாக்டர்களுடன் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாமல்ஸ்டிரைக் மதியம் வரை தொடர்ந்தது. மேலும், பிணவறையில் பிரேத பரிசோதனைசெய்யப்படாமல் உடல்கள் உள்ளன. இந்த உடல்களைப் பெற வந்த உறவினர்கள்எல்லோரும் பெரும் சோகத்துடன் மருத்துவமனை முன்பு அமர்ந்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற