For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அகண்ட தமிழகம்" வெப் சைட்: நெடுமாறன் விளக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வீரப்பனுடன் இருக்கும் தமிழ்நாடு விடுதலைப் படையினர் இண்டர்நெட்டில் இணையதளம் (சைட்) தொடங்கியிருப்பதாக கூறப்படுவது தவறு என்று பழ.நெடுமாறன்கூறினார்.

தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் பிராமணர் அல்லாத மக்கள் தங்கள் பகுதிகளுக்கு என தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாக இந்தஇணையதளம் உள்ளது என்பது உண்மை. இந்த இணையத் தளத்தின் முகப்பில் தங்களுடைய நோக்கம் என்ன என்பது தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டு காலமாக இந்தியாவில் பிராமணர்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கப்பட வேண்டும். இந்த மக்கள்அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே இந்த இணையதளத்தை உருவாக்கியவர்களின் நோக்கமாகும்.

இந்த இணையத் தளம் வீரப்பனுடன் இருக்கும் தமிழ்நாடு விடுதலைப் படையினரால் ஏதோ தீடீர் என்று இப்பொழுதுதான் உருவாக்கப்பட்டு இருப்பதாகபொய்யான குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன.

ஆனால் இந்த இணையதளத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கியிருக்கிறார்கள் என்ற உண்மை அடியோடு மறைக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இந்த இணையத் தளம் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த இணையத் தளத்தில் புதிய பகுதிகள்சேர்க்கப்பட்டுள்ளன. எனவே ஏப்ரல் மாதத்திற்கு முன்பே இந்த இணையத் தளம் இயங்கி வந்திருக்கிறது என்பது தெளிவு.

இதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அமைப்பின் பெயர் தமிழ்நாடு விடுதலை முன்னணி என்பது ஆகும். வீரப்பனுடன் இருக்கும் அமைப்பின் பெயர் தமிழ்நாடுவிடுதலைப்படை என்பதாகும்.

இதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் வேண்டும் என்றே திட்டமிட்டு ஜெயலலிதா, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்றவர்கள் அபாயக்குரல்எழுப்பியுள்ளனர்.

அகண்ட தனித் தமிழ் தேசம் அமைய வேண்டுமானால் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று இந்த இணையதளத்தில்அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். பல நூறு பக்கங்களைக் கொண்ட இந்த இணையதளத்தில் எந்த ஒரு இடத்திலும்இத்தகைய வாசகங்கள் இல்லை.

மாறாக, தலித்துக்கள் மற்றும் திராவிடர் ஒற்றுமை பாதுகாக்கப்படவேண்டுமானால் திராவிட மற்றும் தலித் கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

திராவிடக் கட்சிகளில் அ.தி.மு.கவும் அடங்கும் என்ற உண்மையை ஜெயலலிதா மறைத்துள்ளார். ஆனால் இந்தியாவில் மொகலாயர்களின்ஆட்சிக்காலத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தும் எச்.பி.மொகலிஸ்தான் என்ற இணைய பக்கத்தில் தான்கொரில்லாப்போர் முறை மற்றும் வெடிகுண்டுகள் தயாரிப்பு முறைகள் இடம் பெற்றுள்ளன.

ஆனால் இதை சாமர்த்தியமாக மறைத்து தமிழ்நாடு விடுதலைப்படை இணையதளத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அகண்ட தமிழகம் என்ற பெயரால் கேரளம் முழுவதையும் மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளையும் அபகரிக்க தமிழர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பதுபோல் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஆதாரம் ஏதுமில்லாத வகையில் இத்தகைய நச்சுப்பிரச்சாரம் திட்டமிட்டு இப்பொழுது செய்யப்படுவது ஏன்? வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வைகொச்சைப்படுத்துவதற்காக வேண்டுமென்றே இத்தகைய பொய் பிரச்சாரங்களில் இவர்கள் ஈடுபட்டு இருப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு தனது அறிக்கையில் நெடுமாறன் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X