For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆங்கிலக் கல்வி அவசியம் .. சபாநாயகர் பி.டி.ஆர்.

By Staff
Google Oneindia Tamil News

ஓர் அரசு பஸ், ஒரு குடிமகன் மீது மோதி விடுகிறது: அவன் கை, கால் இழக்கிறான்: நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிவு செய்கிறான்: கீழ்க்கோர்ட் அவனுக்குச் சாதகமாக பதில் அளிக்கிறது: அரசு, ஹைகோர்ட்டுக்கு அவனைஇழுக்கிறது: அங்கும் அவன் பக்கமே தீர்ப்பு வர, அவனை சுப்ரீம் கோர்ட்டுக்கு அரசு இழுக்கிறது.

இது என்ன நியாயம்? ஓர் அரசுக்கு இருக்கக்கூடிய பண பலத்தில், கோடியில் ஒரு பங்கு கூட இல்லாத ஒரு சாதாரணகுடிமகனை இப்படி இழுத்தடித்து, அவனை நொடிப்பது என்ன தர்மம்? இது ஓர் உதாரணமே!

இது போன்று ஆயிரக்கணக்கான வழக்குகளை அரசு விடாப்பிடியாக நடத்துகிறது. சம்பள பாக்கி, வேலைஉத்திரவாதம், நியமனம், ப்ரமோஷன், ப்ராவிடண்ட் ஃபன்ட் அல்லது பென்ஷன் விவகாரம்,நிலப்பட்டாவிவகாரம்... என்று எந்த மாதிரி வழக்கை எடுத்துக் கொண்டாலும் - இதே இழுத்தடிப்புதான்.

இந்த அடாவடியை மத்திய - மாநிஸ அரசுகள் நிறுத்தினால் போதும் - வழக்கு தேக்கம் கணிசமாக குறையும்.குடிமகனுக்கு எதிரான வழக்கு என்றால் - அதில் அரசு வாதியாக இருந்தாலும் சரி, பிரதிவாதியாக இருந்தாலும் சரி -அப்பீலுக்கே போவதில்லை என்றே தீர்மானித்து விடலாம். பெரிய அநீதி ஒன்றும் இழைக்கப்பட்டு விடாது.

ஓர் ஏமாற்றுப் பேர்வழி கீழ் கோர்ட்டில் வென்றுவிட்டால் கூட பரவாயில்லை: ஆயிரம் அப்பாவிகள் சுப்ரீம் கோர்ட்வரை இழுக்கப்படாமல் காப்பாற்றப்படுவார்கள்: அதுதான் முக்கியம்.

இதைத் தவிர, நீதித்துறை, வாய்தாத் துறையாகாமல் தன்னை காத்துக் கொள்ள தீர்மானிக்க வேண்டும். ஒருவழக்கில், ஒரு தரப்புக்கு, ஓரிரு வாய்தாக்களுக்கு மேல் - எக்காரணம் கொண்டும் கிடைக்காது என்று முடிவெடுத்து,செயலாற்ற வேண்டும். வாய்தாவைப் பொறுத்த வரையில், கேளுங்கள் கிடைக்கும் என்கிற தன்னுடைய ஏசுபிரான்அணுகுமுறையை நீதித்துறை மாற்றிக் கொள்ள வேண்டும்,

குறுக்கு மனுக்கள் குறைய வழி காணப்பட வேண்டும். குறுக்கு மனு காரணமாக, மெயின் வழக்கு, நிறுத்திவைக்கப்பட மாட்டது - என்ற நிலை வந்தாலே போதும்: குறுக்கு மனுக்கள் தாமாகவே குறையும்: மெயின் வழக்கைதாமதப்படுவதற்கே, இப்போது குறுக்கு மனுக்கள் பயன்படுத்தப்படுகின்றன: அதனால் மெயின் வழக்கு தொடர்ந்துநடக்கும் என்றால், குறுக்கு வழக்குகளில் பெரும்பாலானயானவை பதிவாகாமலே போகும்.

நீதித்துறை செய்ய வேண்டிய இன்னொரு காரியம்- தீர்ப்பு அளிப்பதற்கு

ஒரு கால உச்சவரப்பை நிர்ணயிப்பது, இப்போது உள்ள நிலையின்படி, வழக்கு முடிந்து, நீதிபதி, எப்போதுவேண்டுமானாலும் தீர்பளிக்கலாம்.

இது மாறி, வழக்கு முடிந்து, இத்தனை நாட்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்பட்டாக வேண்டும் - என்ற நிர்பந்தம்தோன்ற வேண்டும்.

மற்ற துறைகளுக்கு எல்லாம் இல்லாத விடுமுறை, நீதித்துறைக்குத் தேவையில்லை. அவர்களுக்கு அளிக்கப்படுகிறகோடை கால விடுமுறையும், கிறிஸ்துமஸ் விடுமுறையும் விடை கொடுத்து அனுப்பப்பட்டால், நீதித் துறையின்வழக்கு சுமை கொஞ்சம் குறைய வழி ஏற்படும்.

தனது தாமதத்தின் காரணமாக - இன்றைய நீதிபரிபாலனம், வக்கீல்களின் சொர்க்கம் என்று ஆகிவிட்டது. இது,மக்களின் நம்பிக்கை என்ற நிலை முழுமையாகத் தோன்ற, தாமதம் தவிர்க்கப்பட வேண்டும்: அதைத் தவிர்ப்பதில்கூட, பல வருட தாமதம் தொடர்கிறது என்பது துரதிர்ஷ்டவசமானது.

கருத்தரங்கு கவலைகளினால் இப்பிரச்னை தீராது: அரசும், நீதித்துறையும் முனைந்து அணுகுமுறை மாற்றங்களைச்செய்ய வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X