தென் ஆப்பிரிக்காவில் இந்திய மாணவர் சாதனை
டர்பன்:
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் வெஸ்ட்விலே பல்கலைக்கழகத்தில ஃபார்மசி படித்து வந்த தென் ஆப்பிரிக்க இந்திய மாணவர் 17 பாடங்களில் டிஸ்டிங்ஷன் பெற்றுசாதனை படைத்துள்ளார்.
பூபாளன் நாயுடு என்ற 22 வயது இளங்கலை ஃபார்மசி மாணவர் தனது கடின உழைப்பின் காரணமாக 17 பாடங்களில் டிஸ்டிங்ஷன் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளார்.
இவரும், இவருடன் படித்து வரும் சக மாணவரான ராக்ஷிதா சந்தர் பிரகாஷூம் தங்கள் வெற்றிக்கு தங்கள் ஆசிரியர்கள் அளித்த ஊக்கமும், அவர்கள்சிறந்த முறையில் பாடம் கற்பித்ததும் காரணம் என்று கூறியுள்ளனர்.
இவர்களைத் தவிர வேறு பல தென் ஆப்பிரிக்க இந்திய மாணவர்களும் அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உஸ்கான் ஸ்ரீ குமார் என்ற 20 வயது மாணவர் பல்வேறு பாடங்களில் டிஸ்டிங்ஷன் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தனது குறிக்கோள் சாட்டர்ட்அக்கவுண்டன்ட் ஆக வேண்டும் என்பது எனவும் அதற்காக அடுத்த ஆண்டு ஹானர்ஸ் பட்டப்படிப்பை படித்து முடிக்க இருப்பதாகவும் கூறினார்.
சாதியாகான் என்ற 24 வயது பெண் முதுகலை சர்டிபிகேட் பட்டப்படிப்பிவ் டிஸ்டிங்ஷன் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இவர்கள் அனைவரும் தங்கள் வெற்றிக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், ஊக்கமுமே காரணம் என கூறியுள்ளார்கள். ஆனால் சட்டத்தில் பட்டப்படிப்பு படித்துவரும் ஷெரிஸ் மூட்லே என்பவர் ஆசிரியர்களை குறை கூறியுள்ளார்.
ஆசிரியர்களால் தான் இன்னும் ஒரு செமஸ்டர் படித்து தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், எனது ஆசிரியர் என்னை கிரிமினாலாஜி பாடத்தை படிக்க வேண்டாம் அது தேவையில்லை என கூறினார். அதன் படி நான் அதைபடிக்கவில்லை. ஆனால் பல்கலை கழகம் அந்த பாடத்தையும் படித்து தேறினால்தான் பட்டம் பெற முடியும் என்று கூறிவிட்டது.
இதன் காரணமாக நான் மேலும் ஒரு செமஸ்டர் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. என்னை பல்கலைக்கழகம் ஏமாற்றி விட்டது.
இது குறித்து எனக்கு இறுதித் தேர்வுக்கு இரு நாட்கள் முன்புதான் தெரிவிக்கப்பட்டது. இந்த வருடத் துவக்கத்தில் கூறியிருந்தால் நான் அந்த பாடத்தையும்படித்து தேர்ச்சி பெற்றிருப்பேன். இப்போதுள்ள சூழ்நிலைப்படி நான் வக்கீலாக பயிற்சியும் பெற முடியாது என கூறினார்.
பல்கலைக் கழகம் விடுமுறை காரணமாக மூடப்பட்டிருப்பதால் இதுபற்றி பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள யாரையும் அணுக முடியவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications