புலிகள் வசம் இருந்த பாலத்தை ராணுவம் பிடித்தது
கொழும்பு:
விடுதலைப் புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியபாலத்தை இலங்கை ராணுவ வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஒரு மாத காலத்திற்கு விடுதலைப் புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்திருந்தனர்.ஆனால் இதை இலங்கை அரசும், ராணுவமும் நிராகரித்து விட்டன. இருப்பினும் கூறியபடி, விடுதலைப் புலிகள்சண்டை நிறுத்தத்தை அமல் செய்தனர்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு முக்கிய பாலத்தை கைப்பற்றியுள்ளதாகராணுவம் அறிவித்துள்ளது. ராணுவ செய்தித்தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், நாவற்குழி பாலத்தைராணுவம் கைப்பற்றியுள்ளது. இதைப் பிடிக்க அதிக எதிர்ப்பை ராணுவம் சந்திக்கவில்லை. தொடர்ந்து அந்தப்பகுதியில் சண்டை நடந்து வருகிறது என்றார் அவர்.
யாழ்ப்பாணம் நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நாவற்குழி பாலம். யாழ்ப்பாணம் மற்றும்சாவகச்சேரி பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலையில் இந்த பாலம் மட்டுமே புலிகள் வசம் இருந்து வந்தது.தற்போது இதுவும் ராணுவம் வசம் வந்து விட்டது. இதன் மூலம் இந்த நெடுஞ்சாலை முழுவதும் ராணுவத்தின்கட்டுப்பாட்டில் உள்ளது.
நாவற்குழி சண்டையில் உயிர்ப்பலி ஏதும் இருந்ததா என்பது குறித்து ராணுவத்தின் தரப்பிலோ அல்லது புலிகளின்தரப்பிலோ எந்தத் தகவலும் இல்லை.
புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்த அடுத்த நாளே நாவற்குழி பகுதியில் தீவிர தாக்குதலை இலங்கை ராணுவம்துவங்கி விட்டது. இருப்பினும் இந்தப் பாலத்தை எடுத்துக் கொள்ள அது மேற்கொண்ட முயற்சிகள்பலனளிக்காமல் இருந்தது. தற்போதுதான் சாத்தியமாகியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications