For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவரும் அரசியல்வாதிதான்!

By Staff
Google Oneindia Tamil News

Era.Chezhianஅரசியல் களத்தில் முதிர்ச்சியும், அனுபவமும், தெளிவும் நிறைந்து, 50 ஆண்டுகளாக சேவையாற்றிய திருப்தியுடன் விடைபெறுகிறார் முதுபெரும் அரசியல்வாதிஇரா. செழியன்.

பல முகங்கள் கொண்ட, அரசியல்வாதிகளிடையே இவர் தனி முகம் கொண்டவர். இவரை அரசியல்வாதி என்று நம்புவதே கடினம். நாவலர் என்றுபோற்றப்பட்ட இரா. நெடுஞ்செழியனின் தம்பி இவர். பேரறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவங்கியபோது, அவருடன் இருந்தஎண்ணற்ற தம்பிகளில் இவரும் ஒருவர்.

நாடாளுமன்ற உறுப்பினராக 22 ஆண்டுகள் பணியாற்றிய பழுத்த அரசியல்வாதி. நாட்டில் பல்வேறு ஜாதி மதங்கள், அவற்றினால் ஏற்படும் ஜாதிபூசல்களைக் காரணம் காட்டி அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

செழியனாக மாறிய சீனிவாசன் ..

திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணபுரம் கிராமத்தில் பிறந்த செழியனின் இயற்பெயர் சீனிவாசன். ராஜகோபாலுக்கும், மீனாட்சிக்கும் மகனாகப்பிறந்த இவர், பெரியாரால் ஈர்க்கப்பட்டு தன் பெயரை செழியன் என்று மாற்றிக் கொண்டார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஈன்றெடுத்த அரசியல் நட்சத்திரங்களில் செழியனும் ஒருவர். துணை ஜனாதபதி இதாயதுல்லாவாலும், முஸ்லீம் தலைவர்காயிதே மில்லத்தாலும் பாராட்டப்பட்டவர் இவர். நாடாளுமன்றத்தின் நம்பிக்கை ஒளி என பாராட்டப்பட்டவர் செழியன்.

படிக்கும்போதே திராவிட சேவை ..

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த போது, திராவிட மாணவர் பேரவை என்ற அமைப்பை நடத்தினார். இவர்களது வீட்டில் நடந்த அனைத்துதிருமணங்களும் பெரியார் முன்னிலையில் நடந்த சீர்திருத்தத் திருமணங்களாகும். 44 ம் ஆண்டில் அண்ணாவால் ஈர்க்கப்பட்டார். பின்னர் 49 ல் திமுக வில்இணைந்தார்.

1967 ம் ஆண்டில் அண்ணா நடத்தி வந்த நம்நாடு என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். உலக நாடாளுமன்றங்களில் ஜனநாயக நெறிமுறைகள் என்றஆய்வுக்கட்டுரையை எழுதினார்.

இவர் எழுதிய கதை பணம் பந்தியிலே என்ற பெயரில் திரைப்படம் ஆனது. பகுத்தறிவு கொள்கைகள், மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமூக விழிப்புணர்வுஆகியவற்றை மையமாக வைத்தே இவர் எழுதிய புத்தக்கங்கள் இருந்தன.

கலை, இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட செழியன், தீவிர அரசியலில் ஈடுபட்டதால், நேரமின்மை காரணமாக தொடர்ந்து அவரால்எழுத்துலகுக்கு வரமுடியவில்லை.

பின்னர், அண்ணாவுடன் இவருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து பிரிந்தார். அப்போது செழியன் கூறுகையில், பிரச்சனைகளால் அண்ணாவிடமிருந்துபிரியவில்லை. கருத்து வேறுபாடுதான் அவரிடமிருந்து பிரியக் காரணம். அண்ணா அரசியல் நாகரீகம் மிகுந்தவர் என்று குறிப்பிட்டார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் ..

1962 ம் ஆண்டு முதல்முறையாக பெரம்பலூர் தி.மு.க எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார். 67 மற்றும் 71 ம் ஆண்டுகளில் தி.மு.க எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் துவக்கப்பட்ட ஜனதா கட்சியில் 1974 ம் ஆண்டு சேர்ந்தார். அப்போது ஜனதா கட்சி சார்பில் அமைக்கப்பட்ட 14பேர் கொண்ட போராட்டக் குழுவில் இவரும் ஒருவர். அந்த குழுவில் வாஜ்பாய், அத்வானி, மொராஜி தேசாய் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

வி.பி.சிங் காலத்தில் ஆளுநர் பதவி இவரைத் தேடி வந்தது. ஆனால் இவரோ ஆளுநர் பதவி தேவையில்லை என்று மறுத்தார்.

லோக் சக்தியில் ..

பெங்களூரில் ராமகிருஷ்ண ஹெக்டே லோக் சக்தி கட்சியை 1997 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ம் தேதி தொடங்கினார். அப்போது லோக் சக்தி கட்சியின்தேசியத் துணைத் தலைவராக இரா.செழியன் நியமிக்கப்பட்டார்.

செழியன் தற்போதைய இளைஞர்கள் குறித்துக் கூறுகையில், காந்தி, பெரியார் ஆகியோர் காலத்தில் இளைஞர்கள் மிகவும் எழுச்சி உள்ளவர்களாகஇருந்தார்கள். ஆனால் இப்போது அப்படிப்பட்ட இளைஞர்களைப் பார்க்க முடிவதில்லை. தலைவர்கள் கூறும் கருத்துக்களை இளைஞர்கள் பின்பற்றுவதில்லை.

இப்போது, மக்கள் ஓட்டுப் போடும்போது நல்லது, கெட்டது குறித்து யோசிப்பதேயில்லை. வேட்பாளர்களைப் பார்த்து ஓட்டுப் போட வேண்டும் என்றுஅவர்கள் நினைப்பதில்லை. மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட வேண்டும்.

அப்போதுதான் நல்லாட்சி மலரும். போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால்தான் மக்கள் தவறான அரசியல்வாதிகளைத்தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்றார் செழியன்.

செழியன் தற்போது அரசியலிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். ஒரு செழியன் விலகி விட்டார். இருந்தாலும் இன்னும் ஒரு நூறு செழியன்கள்தமிழகத்திற்குத் தேவை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X