• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கை விழாவைக் கலக்கிய இந்திய யானை

By Staff
|

கேள்வி - பதில்

கே: திடீரென இந்திய - நேபாள நட்புறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பற்றி...?

ப : ஒன்றுமே இல்லாத விஷயம் பெரிதுபடுத்தப்பட்டிருக்கிறது. ஹிந்தி நடிகர்ஹ்ரிதிக் ரோஷன், நேபாளத்தைப்பற்றி தனது பேட்டி ஒன்றில், இழிவாகப் பேசினார்- என்பதில் ஆரம்பித்த தகராறு இது. அப்படி பேசவில்லை என்று அந்த நடிகர் விளக்கினார் ; இந்த ஆண்டில், தான் அளித்த பேட்டிகள் பற்றியவிவரங்களைக் கூறினார் ;

அதில் எந்த பேட்டியில், தான் நேபாளத்தைப் பற்றி இழிவாகப் பேசியது இடம் பெற்றது - என்று காட்டுமாறு கேட்டார்.இதுவரை நேபாளத்தில் யாரும் இதற்கு பதில் கூறவில்லை. ஆக, அவர் அப்படி பேசவில்லை என்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.ஆனால் எதிர்ப்பு, கண்டனம் என்று ஆரம்பித்து, நேபாளத்தில் பெரிய ரகளை நடந்தது.

இந்தியர்கள் தாக்கப்பட்டனர். அங்குள்ள எதிர்க்கட்சிகள் -குறிப்பாக இடது சாரிகள் - அரசை சங்கடப்படுத்துவதற்காக செய்துள்ள காரியம் இது. பொதுவாகவே நேபாளத்தில், அவ்வப்போது இந்திய எதிர்ப்புபெரிதாகத் தோன்றுவது வழக்கமாகிவிட்டது. இன்னமும் இந்த நிலையை மாற்ற முடியாமல் இருப்பது - இந்திய ராஜரீகத்தின் தோல்வி.

கே: அந்த பரம சிவனே பெண்ணுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு (தன் உடம்பில் பாதியை பார்வதிக்குக்கொடுத்தது) கொடுத்திருக்கும்போது, அந்த கடவுளை வணங்கும் நீங்கள் 33 சதவிகிதம் ஒதுக்கீடு கூடகூடாது - என்று கூறுவது ஏன்?

ப : அந்த பரமசிவனுக்கு நேர்ந்த கதி என்ன? பிட்சாண்டி ஆகிவிட்டார். அந்த கதி எல்லோருக்கும் வர வேண்டுமா?

கே: சந்தன வீரப்பனை தேடும் பணியில், பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வரும் செய்தி பற்றி...?

ப : தமிழக அரசைப் பொறுத்தவரையில், வீரப்பனும், அவனுடைய தீவிரவாத கூட்டாளிகளும், தெய்வத்திற்கு நிகர். இறைவன் " இருக்கும் இடம் விட்டு,இல்லாத இடம் தேடி... " அலைவதுதான் பக்தனின் வழக்கம். அரசு அதனால் தான், வீரப்பன் இல்லாத இடத்தில் தேட, அதிரடிப்படையைஏவியிருக்கிறது.

கே: " தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் " அ " என்ற எழுத்தைத் தவிர, வேறு வித்தியாசம் இல்லை " - என்று த.மா.க.வின் ப.சிதம்பரம்தெரிவித்துள்ளது பற்றி...?

ப : த,மா.க.வுக்கும், காங்கிரஸுக்கும் இடையே " த.மா " என்று இரண்டு எழுத்துக்கள் வித்தியாசம் இருக்கிறது என்கிற பெருமையில் பேசுகிறார்.

கே: சாதாரண மனிதனின் மனசாட்சிக்கும், அரசியல்வாதியின் மனசாட்சிக்கும் என்ன வித்தியாசம்?

ப : சாதாரண மனிதனின் மனசாட்சி - நண்பன். அரசியல்வாதியின் மனசாட்சி - தொண்டன்.

கே: தமிழகத்தில் அடுத்தது கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று மூப்பனார் உறுதியாகக் கூறியுள்ளதுபற்றி...?

ப : அவர் என்ன, சாபமா கொடுத்துவிட்டார்? ஆசிர்வாதம் செய்வதாகத்தானே நினைக்கிறார்!

கே: புலி ரத்தத்தால் காளிக்கு பூஜை செய்யப்பட்டது - என்ற செய்தி பற்றி...?

ப : இது என்ன கண்றாவி என்றே புரியவில்லை. சுதாகரன் தான் இதை நடத்தியிருக்கிறார் - என்று பல செய்திகள் கூறுகின்றன. நம்புவதா, இல்லையா என்றுகூட தெரியவில்லை. போகப் போக என்ன தெரியவருகிறது என்று பார்ப்போம். ஆக, நடந்திருப்பது ஓர் அரக்கத்தனம்.

கே: இப்போது வீரப்பன் பிரச்னையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லையே ஏன்?

ப : அடுத்த முறை அவன் ஒரு கடத்தலையோ, செயலையோ செய்கிறபோதுதான், மக்களுக்கு மீண்டும் அவன் நினைவு வரும். அரசுக்கும் அப்படியே.இப்போது, அவனுடன் தீவிரவதிகளும் இருப்பதால் , எங்காவது அவர்கள் நாச வேலையில் இறங்கினால் - முதலில் இது அவர்கள் செய்தது அல்ல என்றஅறிவிப்பும், பிறகு அவர்களைப் பற்றிய கவலையும் வரும்.

கே: அரசியலில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை கிடைக்குமா?

ப : கோடி கிடைத்தால் கூடி வாழ்வார்கள் - என்பது நடக்கும்.

கே: ரம்ஜான் நோன்பில் தலைக்கு தொப்பி வைத்துக்கொண்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி, வைகோ போன்ற தலைவர்கள் - ஹிந்து பண்டிகைகளில் கலந்துகொள்வதில்லையே ஏன்?

ப : "ஒட்டு மொத்த ஓட்டு இல்லாத இடத்தில், நாத்திகம் பேசு " - என்பது பகுத்தறிவு ஆத்திச்சூடியில் ஓர் அறிவுரை.

கே: தேர்தலுக்கு தற்போது தயாராக இருப்பது யார்?

ப : போலி வாக்காளர்கள். இப்போதே முனைந்து போலி அடையாள அட்டைகளை வாங்கி, ரெடியாக இருக்கிறார்கள். நாளையே தேர்தல் வந்தாலும்களத்தில் இறங்க அவர்கள் தயார்.

கே: வீரப்பன் விவகாரம் எதுவானாலும், கருத்து வெளியிட கருணாநிதி அதிகம் தயங்குவதேன்?

ப : " அரசு கருத்து " போலீஸ் அதிகாரிகளால் வெளியிடப்படுகிறது ; முதல்வரின் சொந்த கருத்து நெடுமாறனால் வெளியிடப்படுகிறது. இது போதாதா?முதல்வரே சொன்னால் தான் உண்டா?

கே: " வீரப்பன் தேடுதல் வேட்டை வெளிப்படையாக இருக்க வேண்டும் " என்று நெடுமாறன் கூறியுள்ளாரே?

ப : இதை விட என்ன வெளிப்படை தேவை? போலீஸாருக்கு என்ன பயிற்சி அளிக்கப்படுகிறது ; எல்லை பாதுகாப்புப் படை எங்கு வந்து இருக்கிறது ;எந்தெந்த இடங்களில் " தேடுதல் " நடக்கப்போகிறது - என்பதெல்லாம் அதிகாரபூர்வமாக டி.வி. முலம் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கிறது.

போலீஸாரின் ஆள் பலத்திலிருந்து, ஆயுத பலம் வரை ஒரு விவரம் மிச்சம் மீதி இல்லாமல் தணடோரா போடப்படுகிறது. இதையும் விட " வெளிப்படை "தேவை என்றால், வீரப்பன் கோஷ்டிக்கு கடிதம் எழுதி தகவல் தந்து விட்டு, பதிலைப் பெற்ற பிறகு அதிரடிப்படை, தனது வேலைகளில் இறங்கலாம்.

கே: அரசியல் தூய்மை ஆகிவிட்டால். அதில் குதித்து விடுவீர்களா?

ப : அப்புறம் அது எப்படி தூய்மையாக இருக்கும்? தூய்மை இல்லை என்று உடனே வெளியேற வேண்டியதுதான். அதற்கு குதிக்காமலே இருந்து விடலாமே!

கே: மூன்றாவது அணி சரிப்பட்டு வராது - என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறதாமே?

ப : இதைப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நாட்கள் தேவைப்படுகிற கம்யூனிஸ்ட்களுக்கு, கம்யூனிசம் சரிப்பட்டு வராது - என்பதைப் புரிந்து கொள்ளஇத்தனை வருடங்கள் ஆனதில் வியப்பில்லை.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X