• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

இலங்கை விழாவைக் கலக்கிய இந்திய யானை

By Staff
|

கேள்வி - பதில்

கே: பாராளுமன்றத்தில், தான் பேசும் உரைகளை வெளியிட சொந்தமாக ஒரு பத்திரிகை வைத்திருப்பது- ஒரு எம்.பி.க்குத் தேவைதான் போலிருக்கிறதே?

ப : உண்மைதான். இங்கிருந்து போயிருக்கிற பல கட்சிகளைச் சார்ந்த எம்.பி.க்கள் பேசுவது, பத்திரிகைகளில் வருவதில்லை; வந்தால் கூட ஒரு வரியில் முடித்துவிடுவார்கள். தாங்கள் பேசுவது என்ன என்பதை மக்களுக்குத் தெரிவிக்க, அவர்களிடம் பத்திரிகை இல்லை. என்ன்டம் ஒரு பத்திரிகை மாட்டிக்கொண்டிருப்பதால், நான் இதை பயன்படுத்த முடிகிறது. மற்ற எம்,பி.க்களுடைய நிலை, கஷ்டம்தான்.

கே: பா,ம,க, ஆட்சிக்கு வந்தால் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வியைக்கொடுக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளது பற்றி ...?

ப : என்ன செய்வதாக திட்டமிடுகிறார்களோ தெரியவில்லை! ஒரு வேளை, ஏழைகளுக்குக் கிடைக்கிற கல்விதான் பணக்காரர்களுக்கும் என்று கூறி,எல்லா பள்ளிகளையும் கார்ப்பரேஷன் பள்ளி அளவுக்கு இறக்கி விட்டுவிடுவார்களா!

கே: பாரதிய ஜனதா கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வரும் என்று வெங்கைய்யா நாயுடுகூறியுள்ளாரே?

ப : வந்துவிட்டதே! சமதா கட்சி இரண்டாக உடைந்த பிறகு, உடைந்த பிளவுகள் இரண்டும் பா.ஜ.க. கூட்டணியை ஆதரிக்கின்றனவே? ஒரு கட்சிக்குப்பதிலாக இரண்டு கட்சிகள்! வெங்கைய்யா நாயுடு தீர்க்கதரிசி.

கே:நான் தனி மனிதன் அல்ல;எல்லோருக்கும் சொந்தமானவன் என்கிறாரே நடிகர் ராஜ்குமார்?

ப : எதற்காக இவருக்கு இந்த மாதிரி பேச்சு? இப்படி நினைத்துத்தானே வீரப்பன் சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விட்டான்! மீண்டும் ஏன் இந்த வம்பு?

கே: அயோத்தி விவகாரத்தில் பிரதமர் வாஜ்பாய் வாய் ஜாலம் காட்டுவதாக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து ...?

ப : அப்படியிருந்தாலாவது பரவாயில்லையே? வாய் குளறல் அல்லவா காட்டி விட்டார்! அதனால்தான் விளக்கத்திற்கு மேல், விளக்கம் தேவைப்பட்டது.

கே :அழகிப்போட்டி நமது கலாச்சாரத்திற்கு எதிரானது என்று உ.பி.யின் முதல்வர் ராஜ்நாத் சிங்கும்;இல்லை. அது நமது கலாசாரத்தின் ஒரு பகுதிதான் என்று முலாயம் சிங் யாதவும் கூறுகிறார்கள்.தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?

ப : இப்படி எதைத் தொட்டாலும், அபிப்பிராய பேதம்தான் - என்பது நமது கலாச்சாரம். (இதுபற்றியும் அபிப்பிராய பேதம் வரும்).

கே: ஆண்டு தோறும் அரசில் தலைவர்களும், மதத் தலைவர்களும் நாட்டில் சுபிட்சம் நிலவ, புது வருட வாழ்த்துக்களை தொலைக்காட்சி மூலமும்செய்தித்தாள்கள் மூலமும் தெரியப்படுத்துவது பற்றி தங்கள் கருத்து என்ன?

ப : இவர்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள் காலண்டர் மாதிரி. போன வருட காலண்டர், இந்த வருட குப்பை. இந்த வருட காலண்டர், அடுத்த வருட குப்பை.

கே: மூப்பனுருடனான எனது நட்பை யாராலும் பிரிக்க முடியாது - என்று கருணாநிதி அவ்வப்பொழுதுகூறி வருகிறாரே? இது பற்றி...?

ப : பா.ம.க. தனது கூட்டணியை விட்டு வெளியேறினால், புதிய உறவு ஏதாவது தேவைப்படும் ; அதற்காக இப்போதே சில கதவுகளைத் திறந்து வைப்பதுநல்லது - என்று முதல்வர் கணக்கிடுகிறார். ஆனால் ஒன்று. எப்போதுமே கதவைத் திறந்தே வைத்தால், வெளியிலிருந்து உள்லே வருபவர்களுக்குமட்டுமா வசதி? உள்ளேயிருந்து வெளியே போய் விடுபவர்களுக்கும் அது வசதியாயிற்றே? அதனால் தனது த.மா.கா. நட்பு நாடகத்தை, முதல்வர்ரொம்பவும் தீவிரமாகத் தொடர்வது, அவருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

கே: நேபாளத்தில் இந்தியர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.தான் காரணமா?

ப : இருக்கலாம். ஆனால், நேபாளத்தில் இருக்கிற இந்திய எதிர்ப்பு உணர்வும் இதற்கு ஒரு காரணம். இந்தியர்கள் பலர் அங்கே வசதியாக இருப்பது -நேபாள மக்களின் கண்களை உறுத்துகிறது ; இந்தப் பொறாமை இந்திய எதிர்ப்புத் தீயை வளர்த்து விட நினைப்பவர்களுக்கு உதவுகிறது. மத்திய அரசுமுனைந்து, இந்த நிலையை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், நேபாளம் முழுமையாகவே பாகிஸ்தானின் உளவுத்தளமாக மாறிவிடும்.

கே: அயோத்தியில் இப்போதுள்ள நிலையை சீர் குலைக்கும் முயற்சியில் யாராவது ஈடுபட்டால்,அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் இப்போது கூறியுள்ளது பற்றி...?

ப : ஒரு ரவுண்ட் அடித்து, சரியான இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறார். அதுவரை நல்லதுதான்.

கே: பெரும்பாலும் உங்கள் அரசியல் (ஜோதிடம்) கணிப்பு சரியாக இருக்கும் என்பதால், ஒரு கேள்வி! 2001 - ஆம் ஆண்டில் அரசியல் அரங்கில்என்னென்ன நடக்கும்?

ப : நல்ல ஜோஸியர், கண்ட நேரத்திலும் ஜோஸியம் கூற மாட்டார். பிறகு பார்ப்போம்.

கே: போகிற போக்கைப் பார்த்தால், ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றுதாங்கள் கூறினாலும் ஆச்சரியம் இல்லை போல் தெரிகிறதே...?

ப : அந்த அளவுக்கு, தி.மு.க.வின் தீவிரவாத அபிமானம் வளர்ந்து வருவதாக நீங்கள் நினைத்தாலும், ஆச்சரியமிருக்காது போலிருக்கிறதே!

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X