அமெரிக்கா உதவிக்கரம்
சிங்கப்பூர்:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலங்களுக்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜூனியர்புஷ் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலும், பாகிஸ்தானும் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் 43 வது அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் ஜார்ஜ் டபிள்யூ ஜூனியர் புஷ் தனதுஅறிக்கையில், இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் அதிர்ச்சிடையவைத்துள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா முடிந்த அளவு நிவாரண உதவிகளைச்செய்யும்.
உலகிலேயே தொழில்துறையில் முன்னேறியும், பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்தும் வரும் இந்தியாவில் 52வது குடியரசு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மிகவும் பயங்கரமானது என்று கூறியுள்ளார்.
கோபி அன்னன் வருத்தம்:
ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னன், இந்தியாவில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும்,உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
ஐ.நா.செய்தித்தொடர்பாளர் பிரேடு எக்கார்டு கூறுகையில், நாங்கள் ஐந்து பேர் கொண்ட குழுவை இந்தியாவுக்குஅனுப்பியுள்ளோம். அவர்கள் குஜராத் உள்பட பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு அறிக்கைசமர்பிப்பார்கள். மேலும் ஐ.நா.நிவாரண உதவிகளில் பங்கேற்கும் என்றார்.
பாக். வருத்தம்:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வீஸ் முஷாரப், இந்தியாவுக்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், பூகம்பம்குறித்தும், அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
இந்தியாவில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் சார்பிலும், மக்கள் சார்பிலும்இரங்கலைத் தெரிவித்துள்ளோம்முன்னதாக, பாகிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பத்தில் சாவு எண்ணிக்கை 8 ஆகஉயர்ந்துள்ளது. ஆனால் பொருட்சேதம் பெரிய அளவில் ஏற்படவில்லை.
கனடா பிரதமர் ஜீன் கிறிஸ்டியன் இந்தியாவுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் நிவாரண உதவி அளித்துள்ளார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications