For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூகம்ப நிதி .. ரூ. 5.5 கோடி குவிந்தது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

குஜராத் பூகம்ப நிவாரண நிதி உதவிக்காக தமிழக அரசு தொடங்கிய பூகம்ப நிவாரணநிதிக்கு செவ்வாய்க்கிழமை வரை ரூ 5 கோடியே 36 லட்சத்து 89 ஆயிரத்து 904வசூலாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் கடும் சேதம் ஏற்பட்டது.பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளையும்உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட குஜராத் மக்களுக்கு உதவ தமிழக அரசு பூகம்ப நிவாரண நிதிதொடங்கியது. நிநி உதவி செய்ய விரும்புபவர்கள் நிதியை பொதுத் துறைசெயலாளருக்கு காசோலை மூலமாகவோ அல்லது டிராப்ட் ஆகவோ அளிக்கலாம் எனமுதல்வர் அறிவித்திருந்தார்.

இந்த நிதிக்கு முதலில் முதல்வர் தனது 1 மாத சம்பளமான ரூ 10 ஆயிரத்தைவழங்கினார். அமைச்சர் ஆற்காடு வீராசாமி ரூ 10 ஆயிரம் வழங்கினார். தி.மு.க.எம்.எல்.ஏ.குண்டன் ரூ. 1 லட்சம் வழங்கினார். மேலும் பலர் தமிழக அரசிடம் நிதிஅளித்துள்ளனர்.

செவ்வாயக்கிழமை வரை மொத்தம் ரூ 5 கோடியே 36 லட்சத்து 89 ஆயிரத்து 904 நிதிதிரண்டுள்ளது.

குஜராத் மக்கள் துயர் துடைக்க நிதி உதவி செய்ய விரும்புபவர்கள் தங்கள் நிதியை கீழ்கண்ட முகவரிகளுக்கு அனுப்பலாம்.

Prime ministers National Relief Fund,
Prime ministers office,
South block,
New Delhi - 110 011


அல்லது

குஜராத் நில நடுக்க நிவாரணநிதி ,
பொதுத்துறை அலுலவலகம்,
தலைமைச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை - 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X