For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் இனிமையானது .. ரஷிய "வாத்தியாரின் பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

"தமிழ் இனிமையானது, பழமையானது என்பதால், ரஷ்ய பல்கலைக் கழகத்தில் தமிழ் சிறப்பு பாடமாககற்பிக்கப்படுகிறது. இனிமையான மொழி என்பதால் ரஷ்யர்களும் தமிழைக் கற்க பெரிதும் ஆர்வம் காட்டிவருகின்றனர் என மாஸ்கோ பல்கலைக் கழகத் தமிழ்துறை பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்ஸ்கிதெரிவித்தார்.

தமிழ் மொழி ஆராய்ச்சி மற்றும் நூல்கலைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு மாத காலச் சுற்றுப் பயணமாகஅலெக்சாண்டர் துபியான்ஸ்கி தமிழகம் வந்துள்ளார். இந்தப் பயணத்தின்போது கோவைக்கு இவர் வருகைதந்தார்.

கோவை விஜயா பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்பேசுகையில், உலக இலக்கியங்களில் தமிழ் இலக்கியம், தொன்மையும், பழமையும் வாய்ந்ததாகத் திகழ்கிறது. இந்தஇலக்கியத்திற்கு தனிச் சிறப்பு உண்டு.

தமிழ் இலக்கியத்திற்கும், வடமொழி இலக்கியத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. தமிழுக்கு, சமஸ்கிருதத்தால்என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். தமிழகம் வந்ததன் முக்கிய நோக்கங்களில்இதுவும் ஒன்று.

தமிழை ரஷ்ய மாணவர்களின் மனோபாவத்திற்கு ஏற்ப கற்றுக் கொடுக்க போதிய அடிப்படை நூல்கள் இல்லை.நல்ல பாடப் புத்தகங்களும் கிடையாது. நூலின் உதவியால் மட்டும் இம்மொழியைக் கற்றுக் கொடுத்து விட டியாது.படிப்பதற்கான வசதிகள், ஒருங்கிணைந்த அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கி வருகிறேன்.

சிறுவர்கள் கதையைச் சொல்லி தமிழைக் கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் சில நேரங்களில் இவை கூட இலக்கியவடிவங்களில் இருக்கின்றன. இவற்றை எளிமைப் படுத்திக் கற்றுக் கொடுக்கிறோம். இதனால் பல நேரங்களில்தமிழாசிரியர்கள் கதாசிரியர்களாக மாறி விடுகின்றனர்.

தற்கால தமிழ் இலக்கிய நூல்களைப் படிக்க ரஷ்யர்களுக்குப் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தமிழ்பத்திரிகைகள், சஞ்சிகைகள் ரஷ்யாவிற்குத் தொடர்ந்து வருவதில்லை. தமிழ் இலக்கியத்தின் காரண கர்த்தாக்கள்,எழுத்தாளர்கள் மற்றும் அடிப்படை வேர்களை அறிந்து கொள்ள இயலவில்லை என்றார் துபியான்ஸ்கி.

நிகழ்ச்சியில், விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் வரவேற்றார். பசுமை இயக்கத் தலைவர் ஜீவானந்தம்தலைமை வகித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X