For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 மலர்கள் கருகிய அந்த நாள்..

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

தர்மபுரி பஸ் எரிப்பில் இறந்த 3 மாணவிகளின் முதலாண்டு நினைவு தினமானவெள்ளிக்கிழமை மாணவ மாணவிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டேஹோட்டலுக்கு முறைகேடாக அனுமதி அளித்த வழக்கில் முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கலவரம் வெடித்தது. இந்தகலவரத்தின் உச்ச கட்டமாக கோவை வேளாண்மை கல்லூரி பேருந்து தர்மபுரி அருகேஉள்ள இலக்கியம்பட்டி என்ற இடத்தில் எரிக்கப்பட்டது. இதில் பேருந்தில் இருந்த 3மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. மாணவிகள் உயிரோடுஎரிக்கபட்ட முதலாண்டு நினைவு அஞ்சலி வெள்ளிக்கிழமை மாணவிகள் எரிக்கப்பட்டஇலக்கியம்பட்டியில் அனுசரிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரி மாணவிகள் தேங்காய், பூ, மாலைகள் வைத்து மெளன அஞ்சலிசெலுத்தினர். அந்த பகுதி வழியாக வாகனங்களில் சென்றவர்களும் அஞ்சலிசெலுத்தினர். அந்த பகுதியாக வந்த பேருந்துகளும் அங்கு நின்று அஞ்சலி செலுத்திசென்றன.

சிலர் காணிக்கையாக காசுகளையும் வீசி எறிந்தனர். அந்த காணிக்கை காசுகள்மாலையில் காணாமல் போயின.

இந்நிலையில் மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட நினைவு தினத்தையொட்டி தி.மு.க.சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதில் அ.தி.மு.க.வுக்கு எதிரான எதிர்ப்புவாசகங்கள் எழுதப்பட்டிருந்ததால் அ.தி.மு.க. தொண்டர்கள் அந்த சுவரொட்டிகளைகிழித்து எரிந்தனர்.

அஞ்சலியில் குற்றம் சுமத்தப்பட்டவர்களும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பிலும்எவரும் பங்கு பெறவில்லை. ஆனால் நக்சல் அமைப்பினரும், இந்திய மாணவர்பெடரேஷன் அமைப்பினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X