For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஆனந்த் மார்கி களின் சேவை

By Staff
Google Oneindia Tamil News

அஞ்சார் (குஜராத்):

குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து, ஆங்காங்கே கட்டிட இடிபாடு களுக்கிடையில் கிடக்கும் அழுகிய சடலங்களை அகற்றிஅவைகளுக்கு ஆனந்த் மார்கிஸ் என்ற சமூக சேவை அமைப்பு இறுதிச் சடங்கு நடத்தி வருகிறது.

ஆனந்த் மார்கிஸ் சர்வதேச நிவாரணக் குழுவினர் குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வகைகளில் உதவி புரிந்து வருகிறார்கள்.குறிப்பாக கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இறந்து கிடக்கும் சடலங்களை உடனடியாக அகற்றி அவற்றைத் தகனம் செய்கிறார்கள்.

ஆனந்த் மார்கிஸ் இதுவரை 499 சடலங்களைத் தகனம் செய்துள்ளது. குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டு 11 நாட்களாகியும் இன்னும் கட்டிடஇடிபாடுகளிலிருந்து சடலங்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை மட்டும் பூஜ்ஜிலிருந்து 12 உடல்களும்,அஞ்சாரிலிருந்து 12 உடல்களும் அகற்றப்பட்டன.

ஆனந்த் மார்கிசில் உள்ள 400 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில்முகாமிட்டு இடிபாடுகளை அகற்றி சடலங்களைத் தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆச்சாரிய சத்ய ஷெரே ஆனந்த் கூறுகையில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வது மிகவும் எளிதான வேலை.இருப்பினும் அழுகிய உடல்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதன் மூலம் நாங்கள் கடவுளின் அனுக்கிரகத்தைப் பெற முயற்சிக்கிறோம்.

அழுகிய உடல்களை அகற்றும் போது ஏற்படும் துர்நாற்றம் எங்களைப் பாதிப்பதில்லை. ஏனெனில் எங்கள் அமைப்பில் உள்ள அனைவருக்கும் அழுகியஉடல்களை அகற்றுவதற்குத் தேவையான மனவலிமையை தியானம் மூலம் பயிற்சியளிக்கிறோம் என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X