For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு குட்டி ராஜாவின் கதை ..

By Staff
Google Oneindia Tamil News

ஜாகிரோடு (அஸ்ஸாம்):

அவனை ராஜா என்றால் நம்ப முடியாதுதான். ஒன்பது வயதாகும் அச்சிறுவன் மற்ற மலைவாசி சிறுவர்களைப் போல் கையில் கவட்டையுடன் காடுமுழுவதும் சுற்றி வர விரும்புபவன்.

ஆனாலும் அவனுக்கு என்று சில பொறுப்புகள் அவன் விரும்பாமலே கொடுக்கப்பட்டுள்ளன. தந்தை இறந்தவுடன் அவரின் இடத்தை நிரப்புவதற்காகஇச்சிறுவனை தங்களின் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர் திவா இன ஆதிவாசி மக்கள். சுமார் 5 லட்சம் மக்களை கொண்ட திவா இன மக்களில்பெரும்பாலோர், அஸ்ஸாம் மாநில மலைப்பகுதிகளில் வாழ்ந்தாலும் ஒரு பகுதியினர் நகர்ப் பகுதிகளிலும் வசிக்கின்றனர்.

இவ்வினத்தின் வழக்கப்படி தலைவர் இறந்தபின் அவரின் வாரிசே அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவரை அரசர் என்றே மக்கள்அழைக்கின்றனர். அவ்வினத்தவருக்கு அவரே எல்லா வகையிலும் தலைவராக இருக்கிறார்.

ஆங்கில மிஷனரிப் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயதான திப்சிங் தேவ் ராஜா, திவா இனத்தின் பழமையான மரபை கட்டிக் காக்கும்பொறுப்பில் இருக்கிறான். சிறுவனான அவனுக்கு ஒரு தனி உலகம் உண்டு. அவனுக்கு பிடித்தவர்கள் "சச்சின் டெண்டுல்கரும், "செளரவ் கங்குலியும்.அத்தோடு உல்லாசமாக கால்பந்து விளையாட்டை ரசிக்கிறான்.

திவா இனத்தின் தலைவராக இருக்க விருப்பமே எனக்கூறும் அச்சிறுவன் பெரியவனானதும் ஒரு என்ஜினியராக விரும்புகிறான்.

குவஹாத்தியில் இருந்து 56 கி.மீ. தூரத்தில் உள்ள ஜாகி ரோடில், தனது தாயுடன் ஒரு மண்குடிசையில் வசித்து வரும் அச்சிறுவனுக்கு 25பேரை கொண்ட ஒருமந்திரிசபை உள்ளது.

மத்திய அஸ்ஸாமில் உள்ள, மோரிகான், நாகான் மாவட்டங்களின் பல பகுதிகளில் வசிக்கும் 30,000 மக்களை நிர்வகிக்கும் பொறுப்பு இச்சிறுவனுக்கு.இச்சிறுவனைப் போன்று மேலும் 7 தலைவர்கள் இவ்வினத்தின் தலைவர்களாக பல்வேறு பகுதிகளில் உள்ளனர்.

இனத்தின் தலைவரான ராஜா அவர்களுக்கு பாதுகாவலனாக இருப்பதோடு அவ்வினத்தைச் சேர்ந்தவர்களின் திருமணம்,மற்றும் மதசடங்குகளை அவரேநடத்தி வைப்பார். அத்தோடு அவர்களுக்கிடையே வரும் நிலப்பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கிறார்..

அச்சிறுவனின் மந்திரிகளில் ஒருவரான, அன்னாராம் போர்தோலாய் தெரிவிக்கும் போது, திவா இனத்தின் ராஜாவை இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்த இனத்தின் மக்களுக்கு அவர்தான் அரசர். அவரின் முடிவுக்கு திவா இன மக்கள் அனைவரும் கட்டுப்படுவர் என்றார்.

திவா இனம் மட்டுமல்ல, அஸ்ஸாமில் உள்ள கார்பி, கோச் ராஜ்போன்சிஸ், போடோ இன மக்களும், மேகாலயாவின் காஸி, ஜைந்தியா, மற்றும்காரோ இன மக்களும் தங்களுக்கென்று தனி தலைவர்களை அரசர்களாக கொண்டுள்ளனர்.

இனத்தின் தலைவர்களாக இவர்கள் இருந்தாலும் அடுத்தவர்களின் தயவில் தான் இவர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்காக மற்ற மக்கள் தரும் அரிசி ,பணம், மற்றும் பல பொருட்களை கொண்டே வாழ்க்கை நடத்துகின்றனர்.

தன் தந்தையைப் போலவே தானும் தனது இனத்தை திறமையாக நிர்வகிப்பேன் என்று கூறும் அச்சிறுவனின் படிப்புச் செலவையும் திவா இன மக்களேஏற்றுக் கொண்டுள்ளதாக அச்சிறுவனின் தாயார் தெரிவிக்கிறார்.

மற்றவர்களின் தயவில் வாழ்ந்தாலும் மற்றவர்களின் துயரங்களை தீர்த்து, அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதால் இனத்தின் தலைவராக இருப்பதில்பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X