For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனசாட்சி உறங்கினால் மனக் குரங்குகள் ஊர் சுற்றும்!

By Staff
Google Oneindia Tamil News

தேனி:

மனசாட்சி உறங்கினால் மனக் குரங்குகள் ஊர் சுற்றும். அதுபோல இப்போது சில மனக்குரங்குகள் அரசியல் அரங்கில் சுற்றிக் கொண்டுள்ளன என்று கூறியுள்ளார் முதல்வர்கருணாநிதி.

தேனியில் ரூ 6 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகவளாகத்தைத் திறந்து வைத்து முதல்வர் பேசியதாவது:

மூப்பனார் மனசாட்சி படி நல்ல முடிவு எடுக்க வேண்டும். கட்சி பாகுபாடு இல்லாமல்மனசாட்சி படி முடிவெடுக்க வேண்டும். சில மனக்குரங்குகள் சுற்றுவதால்தான் இதைசொல்கிறேன்.

பூம்புகார் படத்தில் மனசாட்சி உறங்கும்போது மனக்குரங்குகள் ஊர் சுற்றும் என வசனம்எழுதியிருந்தேன். மனக்குரங்குகள் சுற்றுவதால் இதை கூறுகிறேன்.

நாகனேரியில் ரூ 8 ஆயிரம் கோடியில் உயர் தொழில் நுட்ப பூங்கா திறக்க அடிக்கல்நாட்டினேன்.அப்போது இங்கிருப்பதை போல் இன்னும் ஒரு மடங்கு மக்கள்கூடியிருந்தனர்.

இந்த தொகுதியின் எம்,எல்.ஏ. அழகர் ராஜா என்னை இங்கு பாராட்டி பேசினார்.பாராட்டாமல் இருக்க முடியாது.மனசாட்சி பாராட்டுகிறேன் என்றார். இவர்த.மா.காவைச் சேர்ந்தவர். நேற்று பாராட்டியவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்.இவர்கள் இருவரும் தற்போது எதிரணியில் இருப்பதாக கேள்வி.

கட்சிபாகுபாடு இல்லாமல், ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ள தொகுதிகளுக்குமட்டுமில்லாமல் அனைத்து தொகுதிகளுக்கும் இந்த அரசு பணியாற்றுகிறது என்பதற்குஇவர்கள் பாராட்டியதே சான்று.

என் உடல் நிலை குறித்து எல்லோரும் பேசினார்கள். நான் நலமுடன் இருக்கிறேன். ஒருநாள் கூட என்னால் உட்கார்ந்து கொண்டு பேச முடியும். நின்று கொண்டு பேசசிரமப்படுவதற்கு காரணம் எனக்கு 77 வயாதாகிறது. இந்த 77 வயதில் 107வயதிற்கான உழைப்பு ஆற்றியிருக்கிறேன். நான் 14 வயதிலேயே பணியாற்ற வந்துவிட்டேன்.

45 வயதிலேயே உட்கார்ந்து கொண்டு பேசுபவர்கள் இருக்கிறார்கள். நான் யாரைகுறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கு தெரியும். நீங்கள், தமிழக மக்கள் நலமாகஇருந்தால் நான் நலமாக இருப்பேன். நீங்கள் தான் உயிர். நீங்கள்தான் என் வாழ்வு,நீங்கள்தான் என் மூச்சு. நீங்கள் நலமாக இருந்தால் தான் நான் நலமாக இருப்பேன் எனஉருக்கமாக பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன் மதுரைக்கு அருகே தும்பைப் பட்டியில் உள்ள கக்கன் நினைவுமணி மண்டபத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X