• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவையில் மென்பொருள் பூங்கா .. பிரதமர் உறுதி

By Staff
|

கோவை:

கோவை மக்களின் கனவான மென்பொருள் பூங்கா ஒன்றை உருவாக்குவதற்கு மத்திய அரசு தேவையானநடவடிக்கையை மேற்கொள்ளும் என கோவையில் பிரதமர் வாஜ்பாய் தெரி வித்தார்.

கோவையில் தொழில் கண்காட்சி வளாகத்தில், சுதேசி ஜனகரன் மஞ்ச் மற்றும் தேசிய மார்க்கெட்டிங் கமிட்டிஆகியவை இணைந்து நடத்தும் சுதேசிப் பொருட்கள் கண்காட்சியை பாரதப் பிரதமர் வாஜ்பாய் துவக்கி வைத்துபேசியதாவது:

ஒரு கண்காட்சி அல்லது விழா என்றால், நமது கிராமப்புறக் கலாச்சாரத்தில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சியாகும்.இதில், கலாச்சாரம், வர்த்தகம், பொழுதுபோக்கு உள்பட ஆன்மிக நிகழ்ச்சிகளும் இடம் பெறும். இது ஒரு இஷ்டதெய்வத்தை மையமாக வைத்து நடக்கும்.

அப்படியானால் கோவையில் நடக்கும் இந்த சுதேசி மேளாவிற்கு எந்த தெய்வம் இஷ்ட தெய்வம்?.அது தான்பாரதமாதா. இன்று பாரதத் தாயைக் கொண்டாடுகிறோம். பாரதமாதாவின் வலிமை, திறமை ஆகியவற்றை நாம்இன்று கொண்டாடுகிறோம்.

இது மாதாவின் சாதனைக் கொண்டாட்டம். இந்தியத் தொழில்கள் மற்றும் சிறுதொழில், முறைசாராத்தொழில்களைப் பற்றி நாம் மகிழ்ச்சியுறும் நாள் இந்த நாள்.

இந்த சுதேசிப் பொருட் கண்காட்சி, நிறுவனங்கள் அல்லாத தொழில்களுக்கு ஒரு விழா வாய்ப்பைக்கொடுத்துள்ளது. அவற்றின் சாதனைகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில், இந்த சிறுதொழில்நிறுவனங்கள் தான் இந்திய ஏற்றுமதிப் பொருள்களில் 35 சதவீதம் பங்கு வகிக்கிறது. மேலும், சமுதாயத்தில் ஒருசமநிலையை ஏற்படுத்தி வருகிறது.

பொருளாதார வளர்ச்சிக்கு வழி:

இந்தக் கண்காட்சியைக் கோவையில் நடத்தும் சுதேசி ஜகரன் மஞ்ச், நமது முக்கிய நோக்கமான சமுதாயப்பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. அதோடு உலக மயமாக்கலையும், பொருட்படுத்தாமல் செய்துவிட்டது. சுயாரஜ்யம் என்ற கொள்கையிலிருந்து சுதேசியும் பிரிக்க முடியாதது.

சுதேசி என்பது நமது சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய இடம் பெற்றது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.இந்த சமயத்தில் நமது தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு நன்றி செலுத்த வேண்டும். சுதேசி என்பதை உருவாக்கியதுஅவரே. இத்தகைய வலிமை வாய்ந்த சிந்தனை, இந்திய சுதந்திரப் போராட்டத்தை நமக்கு மட்டுமல்லாமல்வெளிநாட்டினரும் உணரும் விதத்தில் மாற்றியது.

அரசியலிலும் இந்தக் கொள்கை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. சுதேசி என்பதுசுயமரியாதை. உலகமயமாகும் தற்போதைய சூழ்நிலையில் இது பொருத்தமான கொள்கை. இதே போன்று தான்நாம் என்றும் மற்றவர்களுக்கு அடிமை கிடையாது என்ற கொள்கையும். நாம் நம்மை உருவாக்கிக் கொள்ளமுடியும். நமது முயற்சியால் முன்னேற முடியும். உலகமயமாக்கல் வந்தாலும், அது மற்ற நாடுகளுடன்ஒத்துழைப்பு மற்றும் உறவு மேம்பாட்டிற்கு உதவும்.

இந்த சுதேசிக் கண்காட்சி நடக்கும் தொழில் கண்காட்சி வளாகத்திற்கு வ.உ. சிதம்பரனார் பெயரிடப்பட்டிருப்பதுபொருத்தமாகும். அவர் தான் முதன் முதலில் ஒரு சுதேசிக் கப்பலை உருவாக்கி, பிரிட்டிஷ் ஆட்சியரைக் கதிகலங்கச் செய்தார்.

கோயம்புத்தூரும், அதற்கு அருகில் உள்ள நகரான திருப்பூரும் சுதேசிப் பொருட்கள் உற்பத்தியில் பெரும் பங்குவகிக்கின்றன. கோவை நகரம், கி. 50 ம் ஆண்டிலிருந்தே கிரேக்கம் மற்றும் ரோம் நகரங்களுடன் வணிகத் தொடர்புகொண்டிருந்தது.

கோவையில் தொழில் முன்னேற்றம் என்பது சமுதாயம் சார்ந்தது. இங்குள்ள விளை நிலங்கள் மற்றும் தரிசுநிலங்களில் மக்கள் கடினமாக உழைத்து முன்னேறியுள்ளனர். கடுமையான முயற்சியால் சுயமாகத்தொழிற்சாலையை உருவாக்கியுள்ளனர்.

கடவுள் அருளால் இங்கு தொழில் வளம் அமைந்துள்ளது. கோவை நகரம், 3 வகை தொழில்களில் புகழ் பெற்றுவிளங்குகிறது. டெக்ஸ்டைல், பம்ப் செட் மற்றும் இன்ஜினியரிங். இந்தத் தொழில்களால், உலக அரங்கில் கொடிகட்டிப் பறக்கிறது.

அதே போன்று திருப்பூரும் ஏற்றுமதியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடிரூபாய் அந்நியச் செலவாணியை ஈட்டி வருகிறது. இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட திருப்பூர் குமரன் பிறந்தமண்ணில் சுதேசித் தொழில் கொடி கட்டிப் பறப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சமுதாயத்தின் முக்கிய அங்கத்தைப் பெற்று சிவகாசி, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் தொழில்கள்முன்னேறியுள்ளன. திருப்பூரில் தொழிற்சாலைகள் இணைந்து ஒரு குடிநீர்த் திட்டத்தை உருவாக்கியுள்ளன என்பதுமற்ற நகரங்களுக்கு ஒரு முன் உதாரணமாகும். இதே போன்று கோவையில் சிறு தொழில்கள் சங்கம் இணைந்து ஒருபெரும் தொழில் கண்காட்சி வாளாகத்தை உருவாக்கியுள்ளது என்னைப் பிரமிப்படையச் செய்துள்ளது. இதுசுயமரியாதையின் சின்னமாகும். வரலாற்றில் ஒரு மைல்கல்லும் கூட.

கோவை நகரில் உள்ள தொழிலதிபர்களின் நவீனத் தொலை நோக்கப் பார்வையை நான் பாரட்டுகிறேன். இங்கு 70கல்லூரிகளும், பாலிடெக்னிக்குகளும் இருப்பது இம்மக்கள் தங்களை எதிர்காலத்தில் முன்னேற்றிக் கொள்ளஉதவும் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு மட்டும் தனியாக உயர்கல்வியைக் கற்பிக்கச் செய்வது என்பது இயலாதகாரியம்.

கோவை, தகவல் தொழில் நுட்பத்திலும் முன்னேறி வருகிறது. இந்த நவீன தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தகோவையில் ஒரு மென்பொருள் பூங்கா உருவாக வேண்டும் என்பது இந்நகர மக்களின் ஆசை. இதனை கூர்ந்துகவனித்து, தேவையான நடவடிக்கைகளை எனது அரசு மேற்கொள்ளும்.

இந்தியா முழுவதிலும் உள்ள 32 லட்சம் சிறு தொழிற்சாலைகள், 177 லட்சம் வேலை வாய்ப்புகளைஉருவாக்கியுள்ளது. நமது பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த சிறுதொழில்களின்வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற் கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் சிறு தொழில்வளர்ச்சிக்காக பல சலுகைகளை அறிவித்துள்ளேன். மேலும், காதி கிராமத் தொழில்கள் முன்னேற்றத்திற்கும் அரசுபல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

2 வது முறையாகத் தமிழகம்:

கடந்த ஒரு மாத காலத்தில் நான் இரண்டாவது முறையாகத் தமிழகம் வந்துள்ளேன். இங்கு வந்து திரும்பிச்செல்லும்போதெல்லாம் தமிழகம் தொழில் துறையில் ன்னேறி வருவதாகவே உணர்கிறேன். இதற்காக தல்வர்கருணாநிதியைப் பாராட்டுகிறேன்.

முதல்வர் கருணாநதி, எனது நண்பரும், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவரும் கூட. மத்திய அரசில்அவர் கூட்டாளியும் கூட. இந்த கூட்டணி யைப் போலவே மற்ற மாநிலங்களிலும் உறவு தொடர வேண்டும் எனவிரும்புகிறேன்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி, தொடர்ந்து நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துவருகிறது. மத்திய அரசு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த சிலஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவந்துள்ளது. மத்திய மாநில அரசின் உறவுகள் தற்போது நல்ல முறையில் இருந்து வருகிறது. கலாச்சார உறவுகளும்,பொருளாதார சூழ்நிலையும் நமது நாட்டை உயரச் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

மக்களின் கோரிக்கைகளை நீண்ட கால அடிப்படையில் தீர்க்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தீர்த்து வருகிறது. தமிழ்நாடு மக்கள் அடுத்து வரும் தேர்தலில் எங்கள் அரசு சிறப்புடன் செயல்பட ஆதரவளிப்பாளர்கள் என நான்நிம்புகிறேன். இவ்வாறு பிரதமர் வாஜ்பாய் கூறினார்.

விழாவில் லட்சுமி குரூப் நிறுவனங்களின் தலைவர் ஜி.கே சுந்தரம் வரவேற்றார். சக்தி குரூப் தலைவர் மகாலிங்கம்முன்னிலை வகித்தார். சுதேசி ஜனக்ரன் மஞ்ச்சின் கன்வீனர் குருமூர்த்தி தலைமையுரையாற்றினார்.

முன்னதாக விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு., வெங்கய்யா நாயுடு., கண்ணப்பன்,பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணிக் கட்சித் தலைவர் வைகோ, செல்லத்து, திருநாவுக்கரசு., மாவட்ட கலெக்டர்சந்தனம் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more