• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாஜி மந்திரியாலும் பழக்கம் போகுமா?

By Staff
|

சென்னை:

அமைச்சராக இருந்தபோது வாங்கி வாங்கி பழக்கமாகிப் போனதாலோ என்பதாலோஎன்னவோ அமைச்சர் பதவி போன பின்னாலும் தனது கட்சிக்காரர்களிடமே மோசடிசெய்து பணம் வாங்கியுள்ளார் மாஜி மந்திரி அம்மமுத்துப் பிள்ளை. இவர் ஒரு டாக்டர்வேறு.

தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் சீட் வாங்கித்தருவதாக கூறி தனதுகட்சிக்காரர்களிடம் பணம் வாங்கிய இவரையும் இவரிடம் பணம் கொடுத்த ஏமாந்தகட்சிக்காரக்களையும் அ.தி.மு.க.விலிருந்து நீக்கியுள்ளார் அக் கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்துள்ளார்,

இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

அ.தி.மு.க. வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் ஒரு புறம் இருக்கும் போது.படித்தவர்கள்என கூறிக்கொண்டு உயர் பதவியில் இருந்தவர்கள் செய்யும் செயல்களை அறிந்துநான் அதிர்ச்சி அடைந்தேன்.

எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி என் காலம் வரை கட்சியின் வேட்பாளர்கள் தேர்வுநேர்மையான முறையில் நடந்து வருகிறது. யாருடைய பரிந்துரையின் பேரிலும்எவருக்கும்தேர்தலில் சீட் வழங்கப்படுவது கிடையாது.

முன்னாள் அமைச்சர் அம்மமுத்துப்பிள்ளை போன்றவர்கள் தவறான வழிகளில்தேர்தலில் சீட் வாங்கித் தருவதாக ரூ 10 லட்சம் ரூ 15 லட்சம் என பேரம் பேசியிருப்பதுகட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலாகும்.

அம்மமுத்துப் பிள்ளை சென்னையில் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டுக் கொண்டுஉட்கார்ந்து ஜாதகம் கணித்துக் கொடுக்கவும் தேர்தலில் நிற்க சீட் வாங்திக் தரவும் ரூ 10லட்சம் முன்பணம் கொடுக்குமாறு கேட்டு வாங்கியுள்ளார்.

மீதி ரூ 5 லட்சத்தை தேர்தல் சீட் வாங்கித்தந்த பிறகு தந்தால் போதும் என பேரம்பேசியிருக்கிறார்.

ஓட்டலில் இவர் தங்கியிருந்த அறைக்குப் பக்கத்திலேயே ஒரு ஜோசியரையும் உட்காரவைத்து சீட் கேட்டு தன்னிடம் வந்தவர்களிடம் ஜோசியரிடம் சென்று ஜாதகம் கணித்துவாங்கி வரும்படி கூறியிருக்கிறார். இது முறைகேடான செயல்.

கட்சியின் ஆட்சி மன்றக்குழு உதவியுடன்தான் வேட்டாளர் தேர்வு நடைபெறும்.பொதுச் செயலாளர் என்ற முறையில் நான்தான் வேட்பாளர்களை தேர்வு செய்கிறேன்.என்னிடம் பரிந்துரை செய்யும் தைரியம் யாருக்கும் கிடையாது. அது தொடர்பாகயாரும் என்னை நெருங்கவும் முடியாது.

எனக்கு நெருக்கமானவர்கள், தோட்டத்தில் இருப்பவர்களிடம் செல்வாக்குஉடையவர்கள், தோட்டத்தில் பணி புரிவோர் எனக்கு நன்பர்கள் என பொய் கூறிபணம் பெற்று ஏமாற்றுபவர்களிடம் எல்லோரும கவனமாக இருக்க வேண்டும்.அதையும் மீறி ஏமாறினால் அதற்கு கட்சி பொறுப்பேற்காது.

அம்மமுத்துப்பிள்ளை மீது புகார்கள் வந்த போது முன்னரே அவரை கழகத்திலிருந்துநீக்கி வைத்தேன். பல முறை அவர் நேரிலும்,கடிதம் மூலமும் மன்னிப்பு கேட்டு தவம்கிடந்ததால் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டேன். அவர் மீண்டும்முறைகேடான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

முறைகேடான செயல்களில் ஈடுபட்டதற்காக அம்மமுத்துப்பிள்ளை, மற்றும் குறுக்குவழியில் லஞ்சம் கொடுத்து அ.தி.மு.க.வில் தேர்தல் சீட் பெற முயன்ற விழுப்புரம்மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டசபை உறுப்பினரானபரமசிவம்,

செங்கல்பட்டு மாவட்டம் ஆதம்பாக்கத்தை சேர்ந்த அல்லிராஜன், மதுரைமாவட்டத்தின் 72-வது வட்ட மாமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், கன்னியாகுமரிமேற்கு மாவட்டம் கோதநல்லூர் பேரூராட்சி தலைவர் கிதியோன் ராஜ் ஆகியோர்வெள்ளிக்கிழமை முதல் அ.தி.மு.க.விலிருந்கு நீக்கப்படுகின்றனர்.

இவர்களிடம் அ.தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றுகூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X