• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெருங்குகிறது தேர்தல் .. நெருக்கடியில் தி.மு.க.

By Staff
|

சென்னை:

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் தமிழகத்தின் அரசியல் நடவடிக்கைகள்தேர்தலுக்குரிய பரபரப்பின் உச்சத்தில் இருக்கிறது.

குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் தேர்தல் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அனைத்து மாநகராட்சி மன்றநடவடிக்கைகளும் மிக உன்னிப்பாக மக்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.

ஏனென்றால் தேர்தல் நெருங்க நெருங்க ஆளும் கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்கள் கிடப்பில்போடப்பட்டிருந்த பல திட்டங்களையும் விரைவாக அமல் படுத்துவர்.

எதிர் கட்சியினர் தங்கள் பங்குக்கு புதிது புதிதாக குற்றங்களை ஆளும் கட்சி மேல் சுமத்துவர். இரு கட்சிகளிலுமேகடைசி நேர களை எடுப்பு நடவடிக்கைகளும் நடைபெறும். கட்சியில் செல்வாக்கு வாய்ந்தவர்கள் தங்களுக்குவேண்டாதவர்களை கட்சி விரோத நடவடிக்கை குற்றச்சாட்டு சுமத்தி வெளியேற்றி விடுவதும் உண்டு.

மதுரை மாநகராட்சி:

மதுரை மாநகராட்சி மன்ற கூட்டத்தில தி.மு.க. இரண்டாக உடைந்தது. முதல்வரால் தற்போது ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும், அவரது மகன் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களாக கருதப்பட்ட 12 பேர் கட்சியிலிருந்துசஸ்பென்ட் செய்யப்பட்டதால் மதுரை தி.மு.க.இரண்டாக உடைந்தது.

சமீபத்தில் மு.க. அழகிரி தான் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்தநடவடிக்கை எடுதக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அழகிரி கல்வித்துறை அமைச்சரும், மூத்த தி.மு.க. தலைவருமான அன்பழகனையும், மதுரை மாநகரின்தற்போதைய எம்.எல்.ஏ.வும் சட்டசபை சபாநாயகருமான பழனிவேல் ராஜனும் கட்சியை அழிக்கும்நடவடிக்கையில் ஈடுப்பட்டவருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

சஸ்பென்ட் செய்யப்பட்ட 12 கவுன்சிலர்களும் மதுரை மாநகராட்சி மன்றத்தில் தாங்கள் தி.மு.க.உறுப்பினர்களிலிருந்து விலகி அமரவிருப்பதால் தங்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும் எனவும், தங்கள்அணிக்கு தி.மு.க. (அ) என்ற பெயரிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். (அ என்பது அழகிரியைக் குறிக்கும்).

இதன் காரணமாகத்தால் தான் இவர்கள் கட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டார்கள் எனவும் கூறப்படுகிறது.

12 பேர் சஸ்பென்ட செய்ததை எதிர்த்து 7 தி.மு.க. கவுன்சிலர்கள் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. ஆனால்மாநகராட்சி கமிஷனர் தன்னிடம் எந்த விதமான ராஜினாமாக கடிதமும் கொடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.

ராஜினாமா செய்தப்பட்டதாக கூறும் சில பெண் கவுன்சிலர்கள் அழகிரியின் ஆதரவாளர்கள் தங்களைகட்டாயப்படுத்தி வெற்று தாள்களில் கையெழுத்து வாங்கினர்.

அதை ராஜினாமாக கடிதமாக உபயோகப்படுத்தியுள்ளனர் என மாநகராட்சி மேயர் குழந்தைவேலுவிடம்கூறியதாக கூறப்படுகிறது.

மதுரை தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு மதுரையிலும் தென் மாவட்டங்களிலும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பைபாதிக்கக் கூடும் என அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

முன்னர் அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது வெடித்த வன்முறையில் பல பேருந்துகள்தீக்கிரையாக்கப்பட்டன.

இப்போது நடந்து வரும் சம்பவங்களால் எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக மதுரைநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இது ஒரு புறமிருக்க தி.மு.க. அமைச்சர்கள் மீதும் கருணாநிதியின் குடும்பத்தினர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள்எழுந்துள்ளன.

அமைச்சர் மீது வழக்கு:

தமிழக மின்சார மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் ஆற்காடு

வீராசாமியும் அவரது உறவினர்களும் அரசு நிலத்தை முறைகேடாக ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக சி.பி.ஐ.விசராணை நடத்த வேண்டும் த.மா.கா., அ.தி.மு.க.,காங்கிரஸ் கட்சிகள் கோரி வருகின்றன.

மேயர் மீது வழக்கு:

சென்னை மாநகர மேயரும், தமிழக முதல்வரின் மகனுமான மு.க.ஸ்டாலின் சென்னையில் 9 பாலங்கள் கட்டியதில்ரூ 110 கோடி வரை ஊழல் செய்ததாகவும் எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ஸ்டாலின் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் எதிர்கட்சிகள் புகார் கூறியுள்ளன. இது தொடர்பாகவிசாரணை நடந்து வருகிறது.

வழக்கை விசாரித்து வரும் ஊழல் தடுப்பு போலீசார் விசாரணை அறிக்கையை சமர்பிக்க மேலும் அதிக நேரம்கேட்டனர். ஆனால் அதை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. விசாரணை அறிக்கையைை விரைவில்சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஸ்டாலின் மிகப் பெரிய வீடும், அவர் நடத்தி வரும் பொழுதுபோக்கு தொடர்பான வியாபார நிறுவனமும்விசாரணைககு உள்படுத்தப்பட்டுள்ளன.

மேயரின் சொத்து குறித்த முதல் விசாரணை அறிக்கை மார்ச் மாதம் 8-ம் தேதிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும் எனநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X