• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரிசுகளை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகள்

By Staff
|

சென்னை:

வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் பல கட்சி தலைவர்களின் வாரிசுகளும்தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

அடுத்த மாதம் 10ம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் முதுபெரும்தலைவர்களை விட வாரிசுகளுக்கு இடையிலான போட்டியாகவே இருக்கும் எனதெரிகிறது.

அ.தி.மு.க. தனது கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.கட்சிக்கு ஒதுக்கிய 27தொகுதிகளில் சைதாப்பேட்டை தொகுதியும் ஒன்றாகும். சைதாப்பேட்டை தொகுதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

ஏனென்றால் அங்குதான் தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின்மகனும்,சென்னை நகர மேயருமான ஸ்டாலின் போட்டியிடுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

அங்கு ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட இருப்பவர் பா.ம.க. நிறுவன தலைவர்டாக்டர் ராமதாசின் மகன் டாக்டர்அன்புமணி. இவர் ஸ்டாலினை எதிர்த்துபோட்டியிடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதில் ஜெயலலிதா அதிக ஆர்வம் காட்டிவருகிறார்.

ஆனால் ராமதாசுக்கு இதில் விருப்பமில்லை. ஏனென்றால் சென்ற ஆண்டு முதல்பாண்டிச்சேரிஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் பா.ம.க. அதிக ஈடுபாடுகாட்டி வருகிறது. அங்கு பெரும்பாலன பா.ம.க. ஆதரவாளர்கள் டாக்டர் அன்புமணிபாண்டிச்சேரி முதல்வராக வேண்டும் என கூறி வருகிறார்கள்.

இந் நிலையில் அன்புமணி சைதாப்பேட்டை தொகுதியில் அன்புமணிபோட்டியிடுவதை விரும்பாதது நியாயம் தானே?

பாண்டிச்சேரியில் தற்போது ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் ஆட்சியை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. பா.ம.கவும் ஜெயலலிதாவுடன் செய்து கொண்டஒப்பந்தப்படி வெற்றி பெற்றால் சுழற்சி ஆட்சி முறையில் முதல் இரண்டரை ஆண்டுஆட்சி தங்களுக்குத்தான் என்ற முடிவை மறு பரிசீலனை செய்யவோ அல்லது பின்வாங்கவோ தயாராக இல்லை.

காங்கிரஸ் கட்சி பா.ம.கவுடன் எந்த விதமான ஆட்சி பங்கீடுக்கும் தயாராக இல்லை.இரு கட்சிகளும் தங்கள் நிலையில் பிடிவாதகமாக இருப்பதால்தான் பாணடிச்சேரிகூட்டணி குறித்து குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

அன்புமணியை சைதாப்பேட்டையில் போட்டியிட வைத்ததன் மூலம் ஸ்டாலினுக்குஇணையான வேட்பாளரை நிறுத்திவிட்டதாக ஜெயலலிதா கருதுகிறார்.

ஆனால் இதன் மூலம் ஜெயலலிதா பா.ம.கவின் பாண்டிச்சேரி ஆட்சிக் கனவையும்கலைத்து விட்டார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தி.மு.கவையும் ஆட்டிப் படைக்கிறது வாரிசு அரசியல். மதுரையில் கருணாநிதியின்மகன் மு.க.அழகிரி.தி.மு.கவை எதிர்த்து அ.தி.மு.க. ஆதரவுடன் சுயேட்சையாகபோட்டியிட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவருக்கும் இவரது சகோதரர் ஸ்டாலினுக்குமிடையே உள்ள விரோதம் உலகம்அறிந்தது.

தி.மு,கவில் ஸ்டாலின் அதிகாரம் உள்ளது. தான் வெற்றி பெற்ற இளையான்குடி தனக்குதரப்படவில்லை என கோபம் கொண்டு தி.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவில்இணைந்தார் தமிழக அமைசர் தமிழ் குடிமகன்.

அவருக்கு அ.தி.மு.கவில் சீட் கொடுக்கப்பட்டால், தமிழ்க்குடிமகனின் வாரிசையேஅப்பாவை எதிர்த்து நிறுத்த திமுக திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்குடிமகன் கூறுகையில். தந்தையையும், மகனையும் விரோதிக்கவைக்கும் கீழ்த்தரமான அரசியல் விளையாட்டை தி.மு.க. விளையாடுகிறது எனசாடினார்.

சமீபத்தில் த.மா.காவிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்றஅமைப்பைத் தொடங்கினார் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம். இந்த கட்சிக்குதி.மு.க.3 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதில் ஒரு தொகுதியில் சிதம்பரத்தின் மகன்கார்த்திக் போட்டியிடலாம் என தெரிகிறது.

இந்நிலையில் த.மா.கா. தலைவர்கள் கூறுகையில் த.மா.கா. தலைவர் மூப்பனாரின்மகன் கோவிந்தவாசன் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவாக பிராசாரம் செய்வார் எனஅறிவித்துள்ளது.

இதுவரை பழுத்த பழங்களிடம் சிக்கித் தவித்தது தமிழ்நாடு. இப்போது இவர்களின்வாரிசுகளிடம் சிக்கப் போகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X