• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெயிலை சமாளிக்கும் வழிகள்

By Staff
|

Sun1. நல்லா குளிங்க!

அடிக்கடி குளிப்பதன் மூலம் உடலை சூட்டிலிருந்து காக்கலாம். ஆனால் அலுவலகம் செல்வோர் அடிக்கடி குளிப்பதுசாத்தியமில்லாத விஷயம். அதுவும் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் சென்னையில் அடிக்கடி குளியல்நடக்கவே முடியாத காரியம்.

காலையில் ஒருமுறை குளித்து விட்டு அலுவலகம் போன பிறகு, மீண்டும் மாலையில் வீடு திரும்பியதும்சின்னதாக ஒரு குளியல் போடலாம். குளித்தால் மட்டும் வெயிலிலிருந்து தப்பி விட முடியும் என்று நினைத்துவிடக் கூடாது. வியர்வை நாற்றத்தால் மற்றவர்கள் பாதிக்கப்படாமல் தடுக்க இது உதவும். அவ்வளவுதான்.

2. அடிக்கடி குடிங்க!

Sunவெளியே செல்லும்போது கையில் வாட்டர் பாட்டிலை வைத்துக் கொள்வது நல்லது. கெளரவம் பார்க்காமல் இதைச்செய்ய வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வழியில் தாகம் ஏற்பட்டு தவிக்க நேரிடும்.

5 நிமிஷம் கூட தொடர்ந்து நடக்க முடியாத நிலை இப்போது சென்னையில். கால்கள் தளர்ந்து விடும், நாக்குவறண்டு விடும். உடல் முழுவதும் சூடு பரவி உடலே மரக்கட்டையாகி விட்டது போன்ற உணர்வு ஏற்படும்.இதைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வெளியில் கிடைக்கும் தண்ணீர் நன்றாக இல்லாவிட்டால்காலரா போன்ற ஏதாவது வந்து விடலாம். எனவே கூடவே வாட்டர் பாட்டிலை கொண்டு சென்றால் நல்லது.

வெறும் தண்ணீரை கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, அதில் கொஞ்சம் குளுக்கோஸ் அல்லது எலுமிச்சம்பழத்தை பிழிந்து எடுத்துச் செல்லலாம். சூட்டைக் குறைத்து, உடலில் நீர்ச்சத்து வறண்டு விடாமல் பாதுகாக்கும்.

3. நடக்காதீங்க!

வெயிலில் நீண்ட தூரம் நடப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் நடந்தால் உடம்பு தளர்ந்து விடும், மயக்கம்வரலாம். பஸ்சில் போவது நல்லது. பஸ் கிடைக்காவிட்டால் அதற்காக நீண்ட நேரம் பஸ் ஸ்டாப்பில் காத்துக்கொண்டிருக்காமல், ஆட்டோ அல்லது வேறு ஏதாவது வாகனங்களில் லிப்ட் கேட்டாவது போய் விட வேண்டும்.

நீண்ட நேரம் வெயிலில் நின்று கொண்டிருந்தால், சன் ஸ்டிரோக் வரலாம். அது ஆபத்து. வயதானவராக இருந்தால்ரத்தக் கொதிப்பு கூடி விடும். வெயிலில் அதிக நேரம் இருப்பதால் நரம்புத் தளர்ச்சியும் வரலாம் என்றுகூறுகிறார்கள். எனவே நீண்ட நேரம் வெயிலில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

4. குடை பிடிங்க!

Sunவெளியில் செல்லும்போது மறக்காமல் குடையை எடுத்துக் கொள்வது நல்லது. மழைக்கு மட்டுமல்ல குடை,வெயிலுக்கும் பயன்படுத்தலாம்.

கலர் குடைக்குப் பதிலாக கருப்புக் குடையை வைத்துக் கொள்வது நல்லது. கலர் குடைகள் வெளிச்சத்தை ஊடுறுவவழி வகுக்கும் என்பதோடு, சூரியக் கதிர்களையும் உள்ளுக்குள் அனுமதிக்கும். இதனால், கலர் குடைகளால்வெயிலிலிருந்து தப்ப முடியாது. அழகுக்கு மட்டுமே அவை பயன்படும்.

மாறாக, கருப்புக் குடைகள் வெயிலை குடைக்குள் ஊடுறுவாமல் தடுக்கும். வெயிலிலிருந்தும் தப்பலாம்.(மனைவிக்கு மட்டுமல்லாது, நம்மைக் காத்துக் கொள்வதற்கும் கூட குடை பிடிக்கலாம்.)

5. தொப்பி போடுங்க!

Sunநடந்து செல்லும்போது, வெறும் தலையுடன் போகாமல் ஏதாவது ஒரு தொப்பியைப் போட்டுக் கொண்டுசெல்லலாம்.

தொப்பி மூலம் பெரிய அளவில் வெயில் கொடுமையிலிருந்து தப்ப முடியாவிட்டாலும் கூட, தலை வேகமாகசூடாகமல் காக்க முடியும். அதற்காக தோலால் ஆன தொப்பியோ அல்லது பிளாஸ்டிக் தொப்பியோ போடக்கூடாது. அது வெயிலை உள்ளேயே வைத்துக் கொண்டு தலையைப் பதம் பார்த்து விடும்.

துணிகளால் செய்யப்பட்ட தொப்பிகள் இப்போது சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. அவற்றைப்பயன்படுத்தலாம். குழந்தைளுக்கு மட்டும்தான் அந்தத் தொப்பிகள் என்று இல்லை. பெரியவர்களும் கூடபயன்படுத்தலாம்.

6. குழந்தைகளைத் தவிர்க்கலாமே!

ஒரு நிமிஷம் இதை வேறு மாதிரியாக நினைத்து விடாதீர்கள். வெயிலில் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டுசெல்வதைத் தவிர்க்கலாமே என்றுதான் சொன்னோம்.

வெயிலில் குழந்தைகள் நடப்பதும், பயணிப்பதும் கொடுமையான விஷயம். அவர்களால் வெயிலின்கொடுமையைத் தாங்க முடியாது. தோல் சுருங்கி, பல வியாதிகள் வரவும் வாய்ப்பு உள்ளது. எனவேகுழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதாக இருந்தால் மாலைக்கு மேல் கூட்டிச் செல்லலாம். அப்படியேஅவசரமாக பகலில்தான் கூட்டிச் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஆட்டோ அல்லது டாக்சியில் கூட்டிச்செல்லுங்கள்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X