For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியை உலுக்கும் குரங்கு மனிதர்கள்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

கடந்த 2 நாட்களாக டெல்லியை அச்சுறுத்தி வருவது குரங்கு மனிதர்களின் தாக்குதல்.

கருங்குரங்கு போல் தோற்றமளிக்கும் இந்த மனிதர்கள் டெல்லியின் பல பகுதிகளிலும் வாழும் மக்களை தாக்கிவருகிறார்கள். எப்போது தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமோ என்ற பீதியில் மக்கள் உறைந்து போயுள்ளனர்.

இந்த மனிதர்கள் பார்ப்பதற்கு கருங்குரங்கு போல் தோற்றமளிப்பதாக கூறப்படுகிறது. இவர்களது தாக்குதல் கடந்தசனிக்கிழமை முதல் தொடங்கியது. கடந்த 2 நாட்களில் 16 பேர் குரங்கு மனிதர்களின் தாக்குதலில்காயமடைந்துள்ளனர்.

இவர்கள் தங்கள் கைகளில் இருக்கும் இரும்பு நகங்களால் தாக்குகிறார்கள் என கூறப்படுகிறது. டெல்லியில்கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்கள் பலரும் மொட்டை மாடியில் படுத்து உறங்கி வருகிறார்கள்.

இவர்கள்தான் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். குரங்கு மனிதர்களின் தாக்குதலால் இது வரை 2 பேர்இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

ஒரு நாள் அமைதிக்கு பிறகு மீண்டும் புதன்கிழமை இரவு குரங்கு மனிதர்கள் கிழக்கு டெல்லி பகுதியில் 8 பேரைதாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து குரு டெக் பகதூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ.) டாக்டர்பன்ராசி தாஸ் கவுதம் கூறுகையில், டெல்லியின் கிழக்கு பகுதியிலிருந்து புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின் 8 பேர்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர் பலத்தகாயமடைந்திருந்தனர்.

காயமடைந்தவர்கள் நள்ளிரவு 12.15 மணியிலிருந்து அதிகாலை 3.15 மணி வரை வந்தனர். இவர்களில் 6 பேருக்குசிறு காயங்கள் மட்டுமே இருந்தது. இவர்கள் சிகிச்சைக்குப்பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இரண்டு பேர்இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ராஜ்ரானி ஷர்மா (வயது 30) என்பவர் தலையில் பலத்த காயத்துடன் வந்தார். இவர் நரம்பியல் சிகிச்சை பிரிவுக்குஅனுப்பி வைக்கப்பட்டார். துலாரி லால் (வயது 20) முன் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு வந்தார் இவர் எலும்புமுறிவு சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்றார்.

குரங்கு மனிதர்களின் தாக்குதலை கண்ட சுபாஷ் விகார் கூறுகையில், நள்ளிரவு சமயத்தில் வீட்டின் மாடியில் தூங்கிக்கொணடிருந்த 3 பேரை குரங்கு மனிதர்கள் தாக்கியதை நான் பார்த்தேன் என்றார். இவர் தாக்குதலுக்குஉள்ளானவர்களின் வீட்டிற்கு அருகில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் மேலும் கூறுகையில், குரங்கு மனிதர்ளின் உடலிலிருந்து ஒளி வருவதைக் கண்டோம். ஆனால் நாங்கள்நிதானிக்கும் முன் அவர்கள் தப்பி ஓடி விட்டனர் என காயமடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

இந்த தாக்குதலால் நாங்கள் பயந்து போயிருக்கிறோம. எங்கள் பகுதியில் வாழ்பவர்கள் வீட்டுக்குள்பதுங்கியுள்ளனர். போலீசார் இந்த பகுதியை வந்து பார்வையிட்டனர். ஆனால் அவர்களால் எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றார்.

போலீசார் குரங்கு மனிதர்களை பிடிப்பதற்காக 3,000 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

போலீசார் கூறுகையில், குரங்கு மனிதர்களின் தாக்குதல் நடத்தியுள்ள பகுதிகள் மத்தியதர மக்கள் வசிக்கும் பகுதி.அங்கு மக்கள் தொகையும் அதிகம். இது போல் மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதியில் அதிக அளவில் அதிகஅளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதான் முதன் முறை.

இது மிருகமாக இருக்கலாம் என மக்கள் கூறுகின்றனர். ஆனால் மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் இதைமறுக்கின்றனர். குரங்குகள் உயரமாக இருக்க வாய்ப்பில்லை.

சில மக்கள் குரங்கு மனிதர்களின் கால்கள் சிகப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருந்ததாக கூறுகின்றனர். சிலர் குரங்குமனிதர்களின் மார்பிலிருந்து விளக்குகள் ஒளி வீசின என கூறுகிறார்கள். சிலர் குரங்கு மனிதர்கள் காரில் சென்றதைபார்த்ததாக கூறுகிறார்கள். இந்த பகுதியில் உள்ள குரங்குகள் மக்களின் பயத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இவையெல்லாம் வெறும் கற்பனை என மக்களிடம் கூறி வருகிறோம். ஆனால் சிலர் மட்டுமே இதை ஒப்புக்கொள்கிறார்கள் என்றனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X